உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் மாவட்ட கல்வி அதிகாரி வீட்டில் ரூ.2 கோடி பறிமுதல்

பீஹாரில் மாவட்ட கல்வி அதிகாரி வீட்டில் ரூ.2 கோடி பறிமுதல்

பாட்னா : பீஹாரைச் சேர்ந்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 2 கோடி ரூபாய் பணம் மற்றும் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பீஹாரில் உள்ள மேற்கு சம்பாரனில் டி.இ.ஓ., எனப்படும் மாவட்ட கல்வி அதிகாரியாக இருப்பவர் ரஜினிகாந்த் பிரவீன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் ரஜினிகாந்த் தற்போது பணியாற்றும் அலுவலகம் மற்றும் ஏற்கனவே பணியாற்றிய பாட்னா, முசாபர்நகர், மதுபானி ஆகிய ஊர்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. பணம் எண்ணும் இயந்திரம் வைத்து அவற்றை எண்ணியதில், 2 கோடி ரூபாய்க்கு மேல் கையிருப்பில் இருந்தது தெரிந்தது. இந்த தகவல் அறிந்ததும், ரஜினிகாந்தை கல்வித்துறை சஸ்பெண்ட் செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

KRISHNAN R
ஜன 24, 2025 09:16

இறுதியில் ஃபோட்டோவிற்கு.... போஸ் கொடுத்து விட்டு.... அந்த வரி கட்டுபவர் செல்வார்


தியாகு
ஜன 24, 2025 08:23

இதெல்லாம் ஒரு பெருமையா, எங்க டுமிழ்நாட்டில் கட்டுமர திருட்டு திமுகவின் சாதாரண வார்டு மெம்பர் வீட்டிலேயே இதை விட பலமடங்கு ஊழல் பணமும் லஞ்ச பணமும் இருக்கும்.


Kasimani Baskaran
ஜன 24, 2025 05:14

பீகார் லஞ்சஒழிப்புத்துறை ஏன் இவ்வளவு கேவலமாக இரண்டு கோடிக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று விசாரிக்க வேண்டும். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் ஒருலட்சம் கோடிக்கு மேல் ஊழல் என்று வந்தால்தான் மாநில விசாரணை அமைப்புக்கள் களமிறமிங்கும். எழுதப்படாத விதிகளை மீறினால் மத்திய அரசு அமைப்புக்கள் என்றால்க்கூட சிறை செல்ல வேண்டி வரும்.


J.V. Iyer
ஜன 24, 2025 04:29

மாநில அரசு ஊழியர்களின் வீடுகளை சோதனைசெய்தால் முக்கால்வாசி பேர்கள் இப்படித்தான் என்று தெரியவரும்.


SANKAR
ஜன 23, 2025 23:23

BJP partner rule !.Aryavisham?


N Sasikumar Yadhav
ஜன 24, 2025 00:21

திராவிட எஜமானர் ஆட்சியில் தமிழகத்தை பாரு இதைவிட பலமடங்கு இருக்கும்


நிக்கோல்தாம்சன்
ஜன 24, 2025 05:36

இங்கிருந்து ஒருத்தன் 350 கோடி வாங்கிட்டுதான் இப்போ இருக்குற தமிழர் விரோதிகளை தெரிந்து எடுத்து கொடுத்தான் நியாபகம் இல்லையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை