உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணு மின் திட்டத்துக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு

அணு மின் திட்டத்துக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நம் நாட்டில் தற்போது மின் உற்பத்தி திறன் 462 ஜிகா வாட் ஆக உள்ளது. அதில் அணுசக்தி மின் உற்பத்தி திறன், 8 ஜிகாவாட் ஆக உள்ளது. அணுசக்தி திட்டத்திற்கு, 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விக்ஷித் பாரத் திட்டத்தின் கீழ் 2047க்குள் 100 ஜிகாவாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அணுசக்தி துறையில், தனியாரை பங்கேற்கச் செய்ய அணுசக்தி சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐந்து சிறிய அணு உலைகள், 2033க்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மின்சார வினியோக சீர்திருத்தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மொத்த மாநில உற்பத்தியில் 0.5 சதவீதம் கூடுதலாக கடன் வாங்க அனுமதி வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ