உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீன எல்லையில் ரூ.2,236 கோடி திட்டம்: அக்.,12ல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

சீன எல்லையில் ரூ.2,236 கோடி திட்டம்: அக்.,12ல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சீன எல்லையில் 2,236 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, வரும் அக்டோபர் 12ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.பாதுகாப்பு துறை வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:லடாக், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் எல்லைப்பகுதிகளில், உள்கட்டமைப்பை மேம்படுத்தும்படி தீவிர படுத்தப்பட்டுள்ளது.அதன்படி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வரும் 12ம் தேதி ரூ.2,236 கோடி மதிப்பிலான 75 திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.அவர் அக்டோபர் 11ம் தேதி சிக்கிம் மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு குப்புப்-ஷெரதாங் சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார்.மேலும் அன்று, காங்டாக்கில் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாட்டில், உரையாற்ற உள்ளார், இந்த உயர்மட்ட கூட்டம், முதல் முறையாக சீன எல்லைக்கு அருகில் நடைபெறும்.எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) தொடங்கி உள்ள 111 சாலை திட்டங்களையும் அவர் துவக்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
அக் 11, 2024 05:53

பல காலமாக உதாசீனம் செய்யப்பட எல்லைப்பகுதிகள் வளர்வது மட்டற்ற மகிழ்ச்சி.


Ramesh Sargam
அக் 10, 2024 21:36

சீன நாட்டிற்கு சரியான ஆப்பு. அதைவிட நம் நாட்டில் உள்ள தேசதுரோகிகளுக்கு மிகச்சரியான ஆப்பு.


Sivagiri
அக் 10, 2024 19:10

இதெல்லாம் ஓவர் - சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெர்மிஷன் வாங்கியாச்சா - கேட்பது காங்., கம்பெனி மேனேஜர்கள் ?


Sundaran
அக் 10, 2024 18:35

மழுங்கிய காஷ்மீர் மக்கள் கோழை காங்கிரஸ் தேச விரோத அப்துல்லா ஆகியோருக்கு தானே ஓட்டு போட்டு உள்ளனர் . நன்றி கெட்ட மக்கள்


R S BALA
அக் 10, 2024 17:39

மிகவும் அருமை இந்தியர்களின் பெருமை..


Palanisamy Sekar
அக் 10, 2024 16:56

காங்கிரசை போன்ற கோழைத்தனம் பாஜகவிடம் இல்லை. துணிந்து இறங்கி நாட்டை பாதுகாப்பதில் சமரசம் செய்துகொள்வதே கிடையாது. இந்நேரம் காங்கிரஸாக இருந்திருப்பின் இந்த இல்லையெல்லாம் சீனா விரிவு படுத்தியிருக்கும். பொய் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ஈடுபட்டு சொன்னதையே சொல்லி சொல்லி திருப்திபட்டுக்கொள்ளும் போக்கு நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்தானது.


வேங்கடசுப்பிரமணியன்
அக் 10, 2024 16:48

வலுவடையும் எல்லைப்பகுதி.


முக்கிய வீடியோ