உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ்சில் கடத்தி வந்த ரூ.25 லட்சம் பறிமுதல்

பஸ்சில் கடத்தி வந்த ரூ.25 லட்சம் பறிமுதல்

பாலக்காடு : பாலக்காடு அருகே, ஆவணங்களின்றி பஸ்சில் கடத்தி வந்த, 25 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரை படி, வாளையார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரமோத் தலைமையிலான போலீசாரும், போதை தடுப்பு பிரிவினரும் ஒருங்கிணைந்து, நேற்று முன்தினம் இரவு வாளையாரில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த கேரள அரசு பஸ்சை நிறுத்தி பயணியரை சோதனை செய்தனர். அப்போது, மகாராஷ்டிரா மாநிலம், சாங்லி மாவட்டம், கேதன்காவ் அமராபூர் பகுதியைச் சேர்ந்த பாப்புசா யஸ்வந்த், 60, என்பவரின் பையில் ஆவணங்களின்றி, 25 லட்சம் ரூபாய் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில், பணத்தை கோவையிலிருந்து பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதிக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, பாப்புசா யஸ்வந்த்தை கைது செய்தனர். தொடர் விசாரணைக்காக வருமானவரி துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !