உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் 8 அதிகாரிகள் வீடுகளில் ரூ.35 கோடி பறிமுதல்

கர்நாடகாவில் 8 அதிகாரிகள் வீடுகளில் ரூ.35 கோடி பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகாவில் எட்டு அரசு அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 35 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள், பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கின.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசின் பல துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது பற்றி, லோக் ஆயுக்தா போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில், பெங்களூரு கோவிந்தராஜ நகர் மாநகராட்சி அலுவலக உதவி இன்ஜினியர் பிரகாஷ், ஷிவமொக்கா இயற்கை விவசாய துறை ஆராய்ச்சி இயக்குநர் பிரதீப், சிக்கமகளூரு டவுன் நகரசபை கணக்கு அதிகாரி லதா மணி உள்ளிட்ட எட்டு அதிகாரிகள் வீடுகளில், நேற்று காலை 7:00 மணி முதல் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.

பெங்களூரு, கலபுரகி, பீதர் உட்பட 12 மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மாலை 5:00 மணியுடன் சோதனை முடிந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்யும் பணி நடந்தது.இதில், எட்டு அதிகாரிகளிடமும் தங்கம், வெள்ளி நகைகள், சொகுசு கார்கள், வீட்டு மனைகள் உள்ளிட்ட சொத்து ஆவணங்கள் என, 35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மொட்டை தாசன்...
ஜூன் 25, 2025 10:49

படித்து முடித்து 30 அல்லது 35 வருடம் கஷ்டப்பட்டு நேர்மையாக உழைத்து ஒருவீடு கட்டி இரண்டு பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணிபார்ப்பதே பெரிய விஷயமாக உள்ளது . நம் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் கோடிகளில் புரளுவது சாதாரணமாகிவிட்டது .


R.RAMACHANDRAN
ஜூன் 25, 2025 07:49

கர்நாடக மாநில தகவல் ஆணையம் மற்றும் லோக் ஆயுக்தா ஆகியன சிறப்பாக செயல்பட்டு அதிகார வர்கத்தின் குற்றங்களை குறைக்கின்றன.ஆனால் தமிழ் நாட்டில் அதிகார வர்கத்தின் குற்றங்களுக்கு உறுதுணையாக உள்ளதால் குற்றங்கள் பெருகுகின்றன.


Iyer
ஜூன் 25, 2025 06:21

அதிகாரிகளை பிடித்த லோக் அயுக்த வுக்கு நன்றி. ஆனால் ஆவணங்களுடன் பிடிபட்டும் SIDDARAMAIAH மற்றும் அவரது மனைவியையும் ஏன் தண்டிக்கவில்லை ?


சிட்டுக்குருவி
ஜூன் 25, 2025 04:38

தமிழ் நாட்டிலும் லோக் ஆயுக்தா இருக்குது ஆனா இல்லை .


Nandakumar Naidu.
ஜூன் 25, 2025 04:35

காங்கிரஸ் என்றாலே corruption, commission, collection. அழிக்கப்பட வேண்டிய தீய சக்தி.


S Sivakumar
ஜூன் 25, 2025 22:44

இது கட்சி சம்பந்தப்பட்ட ஊழல் அல்ல இது தனிப்பட்ட அதிகாரிகளின் மனநிலை பொறுத்தது


நிக்கோல்தாம்சன்
ஜூன் 25, 2025 04:34

எந்த ஒரு காங்கிரஸ் அரசியல்வாதி , அரசு அதிகாரி வீடும் இதில் வராது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை