உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.40 கோடி போதை பொருள் கடத்தல்: பெங்களூரு விமான நிலையத்தில் பயணி கைது

ரூ.40 கோடி போதை பொருள் கடத்தல்: பெங்களூரு விமான நிலையத்தில் பயணி கைது

பெங்களூரு: தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் ரூ.40 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய பயணி, பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று தோஹாவிலிருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவரை, வருவாய் ஆய்வு இயக்குநரகத்தின் பெங்களூரு மண்டல அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர் கொண்டு வந்த இரண்டு சூப்பர் ஹீரோ காமிக்ஸ் பத்திரிகைகளின் எடை, அளவுக்கு அதிகமாக கூடுதலாக இருந்ததால், சந்தேகத்தின் பேரில் அதை ஆய்வு செய்ததில் , காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைக்கட்டுகளுக்குள் வெள்ளைத் தூள் பதுக்கப்பட்டிருந்தது .அதில் 4 கிலோ கோகைன் எனப்படும் போதைப்பொருள் மறைத்து வைத்து கடத்தியது கண்டறியப்பட்டது. கடத்திய போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.40 கோடியாகும். இந்நிலையில் அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்து, 1985 ஆம் ஆண்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் படி, கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை