உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.400 வழங்க வேண்டும்!

ரூ.400 வழங்க வேண்டும்!

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாட்களின் எண்ணிக்கையை, 100ல் இருந்து, 150 ஆக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கி, குறைந்தபட்ச ஊதியமாக, 400 ரூபாய் வழங்க வேண்டும்.- சோனியாபார்லி., குழு தலைவர், காங்.,

பாகுபாடு இல்லை!

கேரளா அல்லது கர்நாடகா என, எந்த மாநில விவசாயிகளிடமும் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதுஇல்லை. நாம் அனைவரும் இந்திய நாட்டின் குடிமக்கள். விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.- சிவ்ராஜ் சிங் சவுகான்மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஓட்டு வங்கி மீது ஆர்வம்!

கர்நாடகாவில், சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அரசியல் அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை காங்., அரசு மீறி உள்ளது. இது, சமூக அமைதியின்மையை உருவாக்கும் முயற்சி. சமூக நல்லிணக்கத்தை பேணுவதை விட ஓட்டு வங்கியை வலுப்படுத்துவதில், காங்., அக்கறை கொண்டுள்ளது.- பசவராஜ் பொம்மைகர்நாடக முன்னாள் முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajan A
மார் 19, 2025 08:05

முதல்ல உங்க குடும்பம் 100 நாட்கள் வேலை செய்ய தயாரா? ₹ 400 போதுமா? இன்னும் ₹4000 கேட்கலாமே? உங்க அப்பன் வீட்டு பணமா என்ன? திவாலான கட்சியை வைத்து கொண்டு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது. ஓ, நானும் ரெளடி தான் ஸ்டைலா?


சமீபத்திய செய்தி