மேலும் செய்திகள்
ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா
16-Apr-2025
பாலக்காடு:பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், கடத்தி வந்த, 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நடைமேடையில் காத்திருந்த இருவரை சோதனையிட்டனர். அவர்களது பையில், 60 லட்சம் ரூபாய் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.விசாரணையில், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மஷேந்திரா ராவாஸ்ஹேப் தேவத்கர், 41, சவுரா அனுஸ், 22, என்பது தெரிந்தது. எர்ணாகுளம் பகுதிக்கு பணத்தை ரயிலில் கடத்திச் செல்லும் வழியில் இருவரும் சிக்கியுள்ளனர்.பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், விசாரணைக்காக இருவரையும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
16-Apr-2025