உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை: ரூ.81 லட்சம் கோடி மதிப்புக்கு யு.பி.ஐ., பரிவர்த்தனை!

டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை: ரூ.81 லட்சம் கோடி மதிப்புக்கு யு.பி.ஐ., பரிவர்த்தனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூலை வரை, ரூ.81 லட்சம் கோடி மதிப்புக்கு யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் நடந்துள்ளது, புதிய சாதனையாக கருதப்படுகிறது.இந்தியர்களின் அன்றாட வாழ்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் தான் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் ரூ.81 லட்சம் கோடி மதிப்புக்கு யு.பி.ஐ., பரிவர்த்தனை நடந்துள்ளது என நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி திலிப் அஸ்பே தெரிவித்தார்.ஒவ்வொரு வினாடியிலும் 3,729.1 யு. பி. ஐ., பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகிலேயே முன்னணியில் இருக்கிறது. 40 சதவீதத்திற்கும் அதிகமான பணம் டிஜிட்டல் முறையில் தான் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1,200 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் நடந்தன. கடந்த 2017- 2018ம் நிதியாண்டில் 92 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மட்டுமே நடந்த நிலையில், ஆண்டு தோறும் இது பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் பணப்பரிமாற்றத்தில் புதிய சாதனையை தொடர்ந்து படைத்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAVI
செப் 03, 2024 21:03

பணப்பரிமாற்ற காலம் இன்னும் குறைந்தால் கரன்சிக்கு முடிவுரை எழுதிவிடலாம்.


nagendhiran
ஆக 31, 2024 18:10

100% பணமில்லா பரிவர்தனை சாத்தியம் ஆனால்? கருப்பு பணம் வாய்ப்பே இல்லை? அப்பத்தா என்ன செய்யும்? கேட்டுட்டு எவனாவது வந்தா........


அசோகன்
ஆக 31, 2024 17:25

Cash பரிவர்த்தனை கருப்பு பணத்திற்கு வழி வகுக்கும்....... கிரேட் மோடிஜி


Corporate Goons
ஆக 31, 2024 14:53

பலரை ஊதாரியாகவும், செலவாளியாகவும் மாற்றி இருக்கிறது.


Rangarajan Cv
ஆக 31, 2024 14:32

As per Rbi data, still we have huge cash in circulation (35,256,556.211 INR mn in 09 Aug 2024).


புதிய வீடியோ