உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.3 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்

ரூ.3 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்

ஹிசார்: ஹரியானாவில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட தொழிற்சாலையில், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள, 5,000 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். ஹரியானா மாநிலம், ஹிசாரில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மல்லாபூர்- – அஸ்ரவா சாலையில் இருந்த ஒரு தொழிற்சாலையில், போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு, 633 அட்டைப் பெட்டிகளில் விற்பனைக்கு அனுப்ப தயாராக வைத்திருந்த, 5,000 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, மூன்று கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அனுமதியின்றி பட்டாசு தயாரித்த ஹிசாரை சேர்ந்த கபில் என்பவர் கைது செய்யப்பட்டார். மாதம், 80,000 ரூபாய் வாடகைக்கு அந்தக் கட்டடத்தை வாடகைக்கு எடுத்த கபில், பிளாஸ்டிக் துகள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான அனுமதி பெற்றிருந்தார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஹிசார் மாவட்ட எஸ்.பி., சித்தாந்த் ஜெயின் எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !