உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1,800 கோடி போதை பொருட்கள் பறிமுதல்; மகத்தான வெற்றி என்கிறார் மத்திய அமைச்சர்!

ரூ.1,800 கோடி போதை பொருட்கள் பறிமுதல்; மகத்தான வெற்றி என்கிறார் மத்திய அமைச்சர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்தியபிரதேச மாநிலம் போபால் அருகே ஒரு தொழிற்சாலையில், ரூ.1,814 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; இருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி இன்று தெரிவித்துள்ளார்.அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:போபால் அருகே ஒரு தொழிற்சாலையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களின் மதிப்பு 1,814 கோடி ரூபாய். போதைப்பொருட்கள் பறிமுதல் செய்ததோடு, இருவர் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் டில்லி போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) இணைந்து இந்த நடவடிக்கை எடுத்தனர்.போதைக்கு எதிரான போராட்டத்தில், மகத்தான வெற்றியைப் பெற்ற ஏ.டி.எஸ்., மற்றும் என்.சி.பி.,க்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
அக் 06, 2024 22:26

சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பல பகுதிகளிலும் இதுபோன்று ரைடு நடத்தி இதைவிட அதிகமாக பறிமுதல் செய்யவேண்டும். சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் சிறையில் இருந்துகொண்டே தன்னுடைய கடத்தல் தொழிலை சிறப்பாக செய்வதாக ஒரு செய்தி.


என்றும் இந்தியன்
அக் 06, 2024 18:59

அப்போ ரெண்டு நாள் முன்னாடி வந்ததே டில்லியில் ரூ 4000 கோடி போதைப்பொருள் கைது என்று அது மகத்தான வெற்றி இல்லையா இதை விட ???


spr
அக் 06, 2024 18:35

போதைப் பொருட்களோ, சுங்கத்துறையினரால் கைப்பற்றப்படும் பொருட்களோ மகத்தான வெற்றி என்றால் அதற்குப் பின் அவற்றைக் யாருமறியாமல் தாங்களே கைப்பற்றும் அதிகாரிகள் என்ன சொல்வார்கள் விசாரணை முடியும்வரை அவற்றை அழிக்கக் கூடாது ஆனால் விசாரணை முடியும் பேதது அவை அங்கிருக்காது இதுதானே நாம் அறிந்த செய்தி.மாநகராட்சி நாய் பிடிக்கும் வண்டி ஒரு தெருவில் பிடித்த நாயை கருத்தடை செய்துவிட்டதாகச் சொல்லிஅடுத்த தெருவில் விடுவது போல இப்படிப் பிடிக்கப்படும் அனைத்துப் பொருட்களுமே அதிகாரிகள் உதவியால் மறுபடியும் சந்தைக்கு வந்துவிடும்


Anantharaman Srinivasan
அக் 06, 2024 18:06

அதானி துறைமுகத்தில் தினமும் முறையாக செக் செய்தால் இதைப்போல் பத்து மடங்கு கிடைக்கும்.


Mohamed Younus
அக் 06, 2024 17:48

கருத்து சொல்லுவதற்கு ஒரு பி,ஜே .பி காரர்களையும் காணோம் . இதே நேரத்தில் மற்ற கட்சிகள் ஆளும் மாநிலம் ஆக இருந்தால் படை திரண்டு வந்து இருப்பார்களே


narayanansagmailcom
அக் 06, 2024 17:39

பல கோடி போதை மருந்து தமிழ் நாட்டில் கண்டுபிடிக்க பட்டது. ஜாபர் மற்றும் அவர் கூட்டாளிகள் இப்போது சிறையில் உள்ளனர். அது சம்பந்தப்பட்ட பல திமுக மந்திரிகள் மட்டும் ஸ்டாளின் உட்பட யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லையே. அது ஏன். பாராலு மன்ற தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்று மோடி சவால் விட்டார். இன்று வரை அது பற்றி ஏன் யாரும் வாய் திறக்க வில்லை. மர்மம் என்ன


Lion Drsekar
அக் 06, 2024 17:28

அலைகளில் ஒரு அலையைக் கண்டு மத்திய அமைச்சர் பெருமிதம் இன்றைக்கு திரும்பும் இடமெல்லாம் இதைவிட மிகப்பெரிய அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக சமுதாயத்தை அடித்து நொறுக்கியவண்ணம் இருக்கிறது .இன்றைக்கு இந்த வெற்றி அதற்குப் பாராட்டுக்கள், வந்தே மாதரம்


subramanian
அக் 06, 2024 16:15

ஐசாக், நீங்கள் துப்பு கொடுத்து அவார்ட் வாங்கலாம் .


J.Isaac
அக் 06, 2024 15:59

உ.பி யிலும் ரெய்டு நடத்தினால் இதைவிட அதிகம் கிடைக்கும்


raja
அக் 06, 2024 15:37

பின்னணியில் எங்கள் ஒன்கொள் விடியல் இருக்க போகிறார் நல்லா விசாரின்க ஆபீசர்ஸ்...


சமீபத்திய செய்தி