உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு விழா: நினைவு அஞ்சல் தலை, நாணயம் அக்.,1ல் வெளியீடு

ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு விழா: நினைவு அஞ்சல் தலை, நாணயம் அக்.,1ல் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை அக்டோபர் 1-ல் வெளியிடுகிறார்.1925ம் ஆண்டு விஜயதசமி அன்று நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., வரும் வியாழக்கிழமை அன்று(அக்டோபர் 2) 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.ஆர்.எஸ்.எஸ்-ன் தன்னலமற்ற சேவை மற்றும் ஒழுக்கத்திற்காக பிரதமர் மோடி நேற்று பாராட்டு தெரிவித்தார். மேலும் அதன் தன்னார்வலர்களின் ஒவ்வொரு செயலிலும் தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பதால் எப்போதும் உயர்வாக உள்ளது.பிரதமர் தனது மாதாந்திர 'மன் கி பாத்' உரையில், 1925 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று கேசவ் பலிராம் ஹெட்கேவரால் நாட்டை அறிவுசார் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டதாகவும், அதன் பயணம் குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என்று கூறியிருந்தார்.இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே முன்னிலையில் வரும் புதன்கிழமை (அக்டோபர் 1) பிரதமர் மோடி, நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை வெளியிடுவார் .இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை