வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வீடு வீடாக மக்களை சந்தித்து...
வீடு வீடாக மக்களை சந்தித்து... விஞ்ஞான ஊழல், இந்து விரோத பிரிவினைவாத கட்சியின் செயலை அம்பலப்படுத்துவோம் ..மத சார்பற்ற கட்சியான பிஜேபி கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு கேட்போம் .....
சென்னை:ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, வரும் நவ., 2 முதல் 23 வரை 'வீட்டு தொடர்பு இயக்கம்' நடத்தப்பட உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா, வரும் அக்டோபர் 2ம் தேதி துவங்குகிறது. அதையொட்டி, ஓராண்டு முழுதும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, அந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அக்., 2 முதல் 12 வரை, அனைத்து ஒன்றியங்களிலும், ஒன்றரை மணி நேர சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதில், ஆர்.எஸ்.எஸ்., முழு சீருடையுடன், அதன் தொண்டர்கள் பங்கேற்கின்றனர். வரும் நவ., 2 முதல் 23 வரை, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், வீடு வீடாகச் சென்று, நுாற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பற்றி பொது மக்களிடம் எடுத்துக்கூற உள்ளனர். இந்த வீட்டு தொடர்பு இயக்கத்தில், பா.ஜ., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஒன்றிய அளவில், ஹிந்து எழுச்சி மாநாடு நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து கருத்தரங்குகள், சமுதாய நல்லிணக்க கூட்டம், இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் என, ஆண்டு முழுதும் நுாற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளதாக ஆர்.எஸ்.எஸ்., அறிவித்துள்ளது.
வீடு வீடாக மக்களை சந்தித்து...
வீடு வீடாக மக்களை சந்தித்து... விஞ்ஞான ஊழல், இந்து விரோத பிரிவினைவாத கட்சியின் செயலை அம்பலப்படுத்துவோம் ..மத சார்பற்ற கட்சியான பிஜேபி கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு கேட்போம் .....