உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு டில்லியில் பிரமாண்ட அலுவலகம்

ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு டில்லியில் பிரமாண்ட அலுவலகம்

புதுடில்லி :ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்காக டில்லியில், 150 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.டில்லியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு, ஜண்டேவாலா பகுதியின் கேசவ் கஞ்சில் புதிய அலுவலகம் கட்டுவதற்காக 2016ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நீடித்த, கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3htoyxmo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அசோக் சிங்கால்

இந்த அலுவலகம், 4 ஏக்கர் பரப்பளவில் 150 கோடி ரூபாய் செலவில், தலா 12 மாடிகளைக் கொண்ட மூன்று பிரமாண்ட கட்டடங்களுடன் அமைந்துஉள்ளது. சாதனா, அர்ச்சனா, பிரேரனா என அவற்றுக்கு பெயரிடப்பட்டுள்ளன.சாதனா கட்டடம், நிர்வாக அலுவலகமாக செயல்படும். அதன் 10வது மாடியில் அதிநவீன வசதிகளுடன் நுாலகம் உள்ளது. இந்த புதிய அலுவலகத்தில் மொத்தம் 300 அறைகள்; 1,300 பேர் அமரும் வகையில் மூன்று அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் ஒன்றுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்காலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வளாகத்தில் மையமாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தோற்றுவித்த கேசவ் பாலிராம் ஹெட்கேவரின் சிலை வைக்கப்பட்டுஉள்ளது. நாடு முழுதும் இருந்து வரும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரின் தங்கும் வசதி உள்ளிட்டவற்றுக்காக அர்ச்சனா, பிரேரனா கட்டடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வளாகத்தினுள் அனுமன் கோவில், மருத்துவமனை அமைந்துள்ளன. 270 கார்களை நிறுத்தும் வகையிலான பார்க்கிங், 20 சதவீதம் சூரிய மின் சக்தியை பயன்படுத்தும் வசதி என ஏராளமான வசதிகளுடன் அமைந்துள்ள இந்த வளாகத்தில், தினமும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் கூட்டம், கலாசார நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நன்கொடை

பா.ஜ., தலைமை அலுவலகம், வி.எச்.பி., அலுவலகம் போன்றவற்றை வடிவமைத்த குஜராத்தை சேர்ந்த அனுப் தேவ் என்பவர் தான், இதையும் வடிவமைத்திருக்கிறார்.கிட்டத்தட்ட 75,000 பேரிடம் இருந்து 5 ரூபாய் முதல் லட்சங்கள் வரை பெற்ற நன்கொடையில், புதிய அலுவலகத்தை கட்டியதாக ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம், வரும் 19ல் திறக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

இறைவி
பிப் 14, 2025 12:52

பரக்கத், 1994 முதல் 2004 வரை கோமாவில் இருந்தது ஆர்எஸ்எஸ்சோ அல்லது பிஜெபியோ இல்லை. கோமாவில் இருந்தது தீயமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும். விருப்பம் இருந்தால் கருணாநிதி கொடுத்த அறிக்கைகளை படிக்கவும்


venugopal s
பிப் 14, 2025 11:38

என்ன வெறும் நூற்றைம்பது கோடி ரூபாய் தானா? அவமானமாக உள்ளது. கடந்த பத்து வருடங்களில் சம்பாரித்த பணத்தில் இது போல் ஊருக்கு ஒன்று கட்டலாமே!


N.Purushothaman
பிப் 14, 2025 16:11

திருட்டு திராவிடன் மாதிரி கொள்ளையடிச்சி கட்டல ...அல்லது சொத்து சேர்க்கல ...


N.Purushothaman
பிப் 14, 2025 10:39

இதை எல்லாம் தாங்கி உள்ள முடியாமல் தேச விரோத சக்திகள் ராவுல் முதற்க்கொண்டு அனைவரும் கத்தி கூப்பாடு போட்டு கொண்டு இருக்கின்றனர் ...


Barakat Ali
பிப் 14, 2025 09:46

அது அவர்களது ஜனநாயக உரிமை .....


user name
பிப் 14, 2025 08:57

இதனால் நாட்டுக்கு நாட்டு மக்களுக்கு பத்து பைசா பிரயோஜனம் இல்லை,


Kasimani Baskaran
பிப் 14, 2025 06:41

தமிழகத்தை தேசவிரோத திராவிடர்களிடம் இருந்து காக்க மாவட்டம் தோறும் கிளைகளை ஏற்படுத்த வேண்டும். இளம் வயதிலேயே சேவை மனப்பான்மையுள்ள குடிமக்களை உருவாக்க முயல வேண்டும்.


Barakat Ali
பிப் 14, 2025 09:48

ஆமாம்.. 1999 - 2004 வரை பாஜகவுக்கு திமுகவுடன் கூட்டணி ஏற்பட்ட பொழுது ஆர் எஸ் எஸ் கோமாவில் இருந்தது...


venkatesan
பிப் 14, 2025 05:16

Congrats


J.V. Iyer
பிப் 14, 2025 04:46

ஓகே, நல்லது. இதுபோல ஒவ்வொரு நகரத்திலும், சிறிய கிராமங்களிலும் இந்த தேச பக்தர்களுக்கு ஹாஸ்டல்கள் கட்டவேண்டும். தமிழகத்தில் இந்து கட்டாயத் தேவை. இந்த ஆர். எஸ். எஸ். காரர்கள் நாட்டுப்பற்றுடனும், ஒற்றுமையாக வாழ்வதெப்படி, நேர்மையாக சுயமாக சம்பாதிப்பது எப்படி, அமைதியாக வாழ்வது எப்படி என்று மக்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். பாராட்டுக்கள்.


Mahendran Puru
பிப் 14, 2025 04:18

நம்ம பணம் மதிப்பிழந்தது. எல்லா மதிப்பும் அவர்கள் மடியில். தேர்தல் பாண்டு பணம் அவர்களுக்கு. அப்புறம் என்ன. டிரௌசர் பார்டிகள் பிரமாண்டமாக கட்டடம் கட்டலாமே.


karthik
பிப் 14, 2025 08:44

RSS என்பது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அதில் பல கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதில் 75 ஆயிரம் பேரிடம் நன்கொடை பெற்று கட்டிடம் கட்டப்பட்டுள்ளது அதில் 300 அறைகள் என்றால் நாடு முழுதும் இருந்து வரும் நபர்கள் தங்க அலுவல் வேலை பார்க்க என்று எல்லாருக்கும் இடம் இருக்கு. இங்குள்ள கொள்ளை கூட்டம் தங்களுக்கு மட்டும் என்று கட்டிக்கொண்ட கட்சி அலுவலகம் போன்று இல்லை.


முக்கிய வீடியோ