உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் எம்.எல்.ஏ.,வை களமிறக்க பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., யோசனை?

முன்னாள் எம்.எல்.ஏ.,வை களமிறக்க பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., யோசனை?

பெங்களூரு: பெங்களூரு மத்திய தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ.,வை களமிறக்கும்படி, பா.ஜ., மேலிடத்துக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைமை ஆலோசனை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.பெங்களூரு மத்திய தொகுதியில், 2009, 2014, 2019 ஆகிய மூன்று முறையும் தற்போதைய பா.ஜ., - எம்.பி., பி.சி.மோகன், தொடர்ந்து வெற்றி பெற்று, தொகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்.நான்காவது முறையாக மீண்டும் களமிறங்குவதற்கு தயாராகி வருகிறார். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., தலைமையிடம் நெருக்கமாக உள்ள ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு சீட் வழங்குவதற்கு பா.ஜ., மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனராம்.தற்போதைய எம்.பி.,க்கு முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவின் ஆதரவு இருப்பதால், மீண்டும் சீட் கிடைப்பதில் சந்தேகம் இல்லை என்றே கூறப்படுகிறது.யாருக்கு சீட் வழங்கலாம் என்பது குறித்து, மல்லேஸ்வரம் அலுவலகத்தில் சமீபத்தில், தொகுதிக்கு உட்பட்ட கட்சி பிரமுகர்களிடம் உள்ளூர் பா.ஜ., தலைவர்கள் கருத்து கேட்டனர்.அப்போது, பலரும் தற்போதைய எம்.பி.,க்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் மட்டுமே, மாறுபட்ட கருத்தை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பா குடும்பத்துடனும் நெருக்கமாக இருக்கிறார். எனினும் பா.ஜ.,வை பொருத்தவரையில் எப்போதும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும்.பெங்களூரு மத்திய தொகுதி விஷயத்திலும், அதிர்ச்சி அளிக்குமா அல்லது வெற்றி வேட்பாளரை மாற்ற வேண்டாம் என்ற முடிவுக்கு வருமா என்பதை அறிய, கட்சித் தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை