உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.எஸ்.எஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல; மோகன் பாகவத் பேச்சு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல; மோகன் பாகவத் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஆர்.எஸ்.எஸ் யாருக்கும் எதிரானது அல்ல; நாங்கள் யாரையும் எதிர்க்காமல் எங்கள் வேலையைச் செய்கிறோம் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்து உள்ளார்.மும்பையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: ஆர்எஸ்எஸ் வேறு எந்த அமைப்புடனும் போட்டியிட்டு உருவாகவில்லை, எந்தவொரு அமைப்பையும் எதிர்க்கும் நோக்கில் தோன்றவில்லை. எங்கள் பணி யாரையும் எதிர்க்காமல் செய்யப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் யாருக்கும் எதிரானது அல்ல. புகழைத் தேடுவதில்லை. சங்கம் அதிகாரத்தைத் தேடுவதில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x4es8a28&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாட்டில் நடக்கும் அனைத்து நல்ல செயல்களும் முறையாகச் செய்யப்பட வேண்டும். அதற்காகத்தான் சங்கம் இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே, முழு சமூகத்தையும் ஒழுங்கமைப்பதைத் தவிர, வேறு எந்தப் பணியும் செய்ய வேண்டியதில்லை என்று சங்கம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டது.மக்கள் எங்கள் அணிவகுப்புகளையும் செயல்பாடுகளையும் பார்க்கிறார்கள்.ஆர்.எஸ்.எஸ் ஒரு துணை ராணுவ அமைப்பு அல்ல. தன்னார்வலர்களால் இயங்கும் அமைப்பாகும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார். இந்த நிகழ்வில் நடிகர் சல்மான் கான், திரைப்படத் தயாரிப்பாளர் சுபாஷ் காய், நடிகையும் நடனக் கலைஞருமான ஹேமா மாலினி, பாஜக எம்.பி., பாடகி அனுராதா பட்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி