ராஜஸ்தானில் துவங்கியது ஆர்.எஸ்.எஸ்., கூட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஜோத்பூர்: ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதனுடன் தொடர்புடைய 30 சங்கங்களின் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு கூட்டம் ராஜஸ்தானின் ஜோத்பூரில் நேற்று துவங்கியது. இதை ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹோசாபலே ஆகியோர் துவக்கி வைத்தனர். கூட்டத்தில் இந்த அமைப்புடன் தொடர்புடைய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், பாரதிய கிஷான் சங்கம் உள்ளிட்ட 30 அமைப்புகள் பங்கேற்கின்றன. இதன் பிரதிநிதிகள் தேசிய ஒருமைப்பாடு, குடும்ப அமைப்பு, சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை உள்ளிட்ட ஐந்து தலைப்புகள் குறித்து விவாதிப்பர். இந்த கூட்டத்தில் சக அமைப்புகளை சேர்ந்த 320 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தேசிய கல்விக் கொள்கை- 2020 தொடர்பாக பல்வேறு அமைப்புகள் மேற்கொண்ட பணிகளை மதிப்பாய்வு செய்தல், பழங்குடியினரை பிரதான நீரோட்டத்துடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.