உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., இண்டியா கூட்டணியை சாடும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்

பா.ஜ., இண்டியா கூட்டணியை சாடும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: “ராமரை எதிர்த்தவர்கள் யாராலும் அதிகாரத்தைப் பெற முடியவில்லை, அவர்கள் ஒன்று கூடினாலும், நம்பர் ஒன்னுக்குப் பதிலாக இரண்டாவது இடத்தில் நின்றனர் என ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்தரேஷ்குமார் பா.ஜ., மற்றும் இண்டியா கூட்டணியை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 400 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்க்கப்பட்டது தே.ஜ., கூட்டணிக்கு சறுக்கல் என கூறப்படுகிறது. அதே நேரம் இண்டியா கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இந்நிலையில் ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்தரேஷ்குமார் கூறியது, லோக்சபா தேர்தலில் ஒரு கட்சிக்கு ராமர் மீது அதீத பக்தி. ஆனால் அக் கட்சிக்கு அகம்பாவமும் ஆணவமும் வந்துவிட்டது. ஆவணத்தால் தான் ராமர் அதிக இடங்கள் தராமல் வெறும் 241 இடங்களுடன் நிறுத்திவிட்டார் ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், ராமருக்கு எதிராக முழக்கமிடுகிறவர்களுக்கு 234 இடங்கள் மட்டுமே கொடுத்து அவர்களையும் தடுத்து நிறுத்தியவர் ராமர்தான்.எனவே மக்களைப் பாதுகாக்கிற ராமர், ராவணனுக்குக் கூட நல்லது செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு இந்தரேஷ் குமார் தெரிவித்துள்ளார். பா.ஜ., இந்தியா கூட்டணியின் பெயர்களை குறிப்பிடாமல் மறைமுகமாக இந்தரேஷ் குமார் விமர்சித்தாலும் பாஜ தலைவர்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
ஜூன் 15, 2024 14:25

பொறுப்பற்ற பேச்சு. நாடு இப்போ இருக்கும் அபாயகரமான நிலையில், எல்லோரும் எப்படி இந்தியா இதிலிருந்து மீண்டு வரப்போகிறது என்ற கவலையில் ஆழுந்திருக்கும்போது, பிஜேபி க்கு சித்தாந்த ரீதியில் திசை காட்டும் ஒரு அமைப்பை சேர்ந்த நிர்வாகி இப்படி போகிறபோக்கில் எதையாவது சொல்லிவிட்டு, அதன்பிறகு நான் அப்படி சொல்லவில்லை, நான் சொன்னதன் பொருள் வேறுன்னு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை ஆரம்பித்து வைத்தவர் அந்த இயக்கத்தின் தலைவர். கடந்த காலங்களில்கூட சில முக்கியமான தேர்தல் சமயங்களில் இது மாதிரி ஏதாவது ஒளறிக்கொட்டிவிடுவார். அதன்பின் நான் சொன்னதின் பொருள் அதுவல்லன்னு எதோ விளக்கம் கொடுப்பார். இவர்களுக்கு அரசியல் தெரியாது என்பதினால்தானே சமுதாய இயக்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்ட நிலையில், வாயை மூடிக்கொண்டு தங்கள் வேலைய மட்டும் பார்த்தால், நன்றாக இருக்கும்.


தத்வமசி
ஜூன் 15, 2024 14:16

ஆர்எஸ்எஸ் என்பது அரசியல் அமைப்பு கிடையாது. அதனால் அவர்கள் எதையும் பேசலாம். ஆனால் பிஜேபி அரசியல் அமைப்பு. இதை முடித்து வைத்ததில் ஆர்எஸ்எஸ்சின் பங்கு அதிகாமாக இருக்கலாம். ஆனால் மக்கள் பிஜேபி தான் முடித்தது என்று கூறுவார்கள். இதனால் பிஜேபிக்கு ஓட்டு கிடைக்கவில்லை. இதை பேசுங்கள் தலைவரே சாதித்த விஷயங்களை சொல்லக்கூடாது என்கிற கோட்பாட்டை கொண்டதால் பெருந்தலைவர் காமராஜர் தோற்கடிக்கப் பட்டார். ஆனால் தோற்கடிக்க வைத்தது இலவச அரிசி. நன்றி மறந்த மக்கள். ஏமாற்றியது யார் ? ஏமாந்தது யார் ? வேலை செய்தவன் கர்வம் கொள்ளத்தான் செய்வான். அகம்பாவம் என்று கூறுகிறீர்கள்.. ஆனால் இதுவரை இந்தியாவில் இருந்த அரசை விட மோடி அரசு செய்த சாதனைகளை கூற உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை. உங்களை மதிக்கவில்லை என்று உங்களுக்கு கோபமாக இருக்கலாம். ஆனால் உங்கள் தலையில் நீங்களே மண் அள்ளி போட்டுக் கொள்கிறீர்கள்.அப்படி இருக்கையில் நீங்கள் எதையும் வெளிப்படையாக விமரிசிக்கவும் உரிமை கிடையாது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை