வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆமாம் வெளிப்படையைாக தானே செய்ககிறீர்கள்.
கோல்கட்டா: '' ஆர்எஸ்எஸ் அமைப்பின் பணி வெளிப்படையானது. எப்போது வேண்டுமானாலும் அதனை மக்கள் பார்க்கலாம்,'' என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.பங்களிப்பு
கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: தற்போது மேற்கு வங்கத்தில் பாபர் மசூதியை மீண்டும் கட்டப்போகிறோம் என அடிக்கல் நாட்டி பிரச்னையை மீண்டும் எழுப்ப அரசியல் சதி நடக்கிறது. ஓட்டுக்காக இது நடக்கிறது. ஹிந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் நலனுக்காக நடக்கவில்லை. கோவில்கள் அல்லது வழிபாட்டு தலங்களை அரசு கட்டக்கூடாது. அது தான் சட்ட விதி. சோமநாதர் கோவில் கட்டப்பட்ட போது நாட்டின் உள்துறை அமைச்சராக சர்தர் வல்லபாய் படேல் இருந்தார். அக்கோவில் கும்பாபிஷேக விழாவில் அன்றைய ஜனாதிபதி பங்கேற்றார். ஆனால், அரசுப் பணம் ஏதும் செலவு செய்யப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ராமர் கோயில் கட்டப்பட்டது. இதற்காக அறக்கட்டளை அமைக்கும்படி உத்தரவிடப்பட்டது. அரசும் அதனை செய்தது. ஆனால், அரசு சார்பில் பணம் வழங்கப்படவில்லை. அதற்கு நாம் தான் பங்களித்தோம்.உண்மையான தேச பக்தர்கள்
நாங்கள். 'முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள்' என்ற ஒரு கருத்து இருக்கிறது. நான் முன்பு சொன்னது போல் ஆர்எஸ்எஸ் பணிகள் வெளிப்படையானவை. எப்போது வேண்டுமானாலும் வந்து , பார்க்கலாம். அப்படி பார்த்த மக்கள், எங்களை உண்மையான தேசபக்தர்கள் என சொல்கின்றனர். நீங்கள் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கின்றீர்கள். ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக பேசுகிறீர்கள். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என சொல்கின்றனர். பலரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். இது பற்றிமேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு நேரில் வந்து பார்க்க வேண்டும்.சூரியன் கிழக்கில் உதிக்கிறது. இது எப்போது முதல் நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. அப்படியானால், அதற்கு நமக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் தேவையா? இந்துஸ்தான் என்பது ஹிந்து நாடு. இந்தியாவை தங்கள் தாய்நாடாக யார் கருதுகிறார்களோ அவர்கள் இந்தியப் பண்பாட்டை போற்றுகிறார்கள். இந்துஸ்தான் மண்ணில் இந்திய முன்னோர்களின் பெருமையை நம்பிப் போற்றும் ஒரே ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் வரை இந்தியா ஒரு ஹிந்துதேசம் தான். இது தான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். ஒரு வேளை அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி அந்த வார்த்தையை சேர்க்க பார்லிமென்ட் முடிவு செய்தாலும் சரி, சேர்க்காவிட்டாலும் சரி பரவாயில்லை. அந்த வார்த்தையை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஏனென்றால் நாங்கள் ஹிந்துக்கள். எங்கள் தேசம் ஒரு ஹிந்து தேசம். அது தான் உண்மை. நாம் மக்கள் தொகையை திறம்பட நிர்வகிக்கவில்லை என்றால், மக்கள்தொகை ஒரு சுமைதான். ஆனால், அது ஒரு சொத்தும் கூட. நமது நாட்டின் சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, வசதிகள்,பெண்களின் நிலை, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் தேவை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு 50 ஆண்டு காலத் திட்டத்தின் அடிப்படையில் நாம் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
ஆமாம் வெளிப்படையைாக தானே செய்ககிறீர்கள்.