உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆரோக்கியத்தை அடைகாக்கும் கம்பு அடை!

ஆரோக்கியத்தை அடைகாக்கும் கம்பு அடை!

மாலை நேரத்தில் எல்லாருக்குமே ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். இதனால் கடைகளுக்கு சென்று வாங்கி வந்து சாப்பிடுவர். அது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.ஏனென்றால் கடைகளில் செய்யப்படும் ஸ்னாக்ஸ், எந்த எண்ணெயில் செய்தது என்பது தெரியாது. இத்தகைய ஸ்னாக்ஸ்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே சுத்தமான ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடலாம்.பொதுவாக சிறு தானியங்கள் சாப்பிடுவது உடலுக்கு ரொம்பவே ஆரோக்கியமானதாக இருக்கும். அதிலும் சிறுதானியமான கம்பு வைத்து செய்யும் அடை மிகவும் சுவையாகவும், நமது உடலை குளிர்ச்சிப்படுத்தும் வகையிலும் இருக்கும்.நிறைய புரதச்சத்துக்கள், நார் சத்துக்கள் இருப்பதால் உடல் எடையையும் குறைக்கும். கம்பு அடை எப்படி செய்வது என்று பார்க்கலாமா.தேவையான பொருட்கள்:ஒரு கப் கம்பு அரிசிஅரை கப் கடலை பருப்புகால் கப் தேங்காய் துருவல்முக்கால் கப் வெல்லம்எட்டு முந்திரிஅரை டீஸ்பூன் ஏலக்காய் பவுடர்ஒரு டீஸ்பூன் நெய்உப்பு, எண்ணெய்வாழை இலைசெய்முறை:குக்கரில் கடலைப் பருப்பை போட்டு, இரண்டு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். கடலை பருப்பு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து, அதில் அரைத்த கடலைப் பருப்பை போட்டு நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பு, தேங்காய் துருவல் போட்டு வறுத்து, கடலைப் பருப்பு வெல்ல கரைசலையும், ஏலக்காய் பவுடரையும் சேர்த்து கிளறி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.கம்பு, அரிசியை தண்ணீரில் நன்கு ஊற வைத்து அரைத்து கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அரைத்த கம்பு மாவையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து கைவிடாமல் கிளறி கெட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு நன்றாக ஆறிய பின் சிறிய உருண்டைகளாக உருட்டி, வாழை இலையில் எண்ணெய் தடவி அடுப்பில் வாட்டி எடுத்துக் கொண்டு, அந்த மாவை வைத்து தட்டிக் கொள்ள வேண்டும்.அதில் கடலைப் பருப்பு பூரணத்தை வைத்து மடித்துக் கொள்ளவும். ஒரு இட்லி பாத்திரத்தில் வாழை இலையில் தட்டி வைத்திருந்த அடையை 15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். உடலுக்கு சத்தான, ஆரோக்கியமான கம்பு அடை தயார். - -நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி