சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (நவ.16) திறக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நவ.17ல் தொடங்கி டிச.27 வரை நடைபெறுகிறது. இதற்காக தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார்.நாளை (நவ.17) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மண்டல பூஜை டிச.27ல் நடைபெறுகிறது. அதன் பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டு டிச.30ம் தேதி திறக்கப்படும். ஜன.14ம் தேதி மகரவிளக்கு திருவிழா நடைபெறுகிறது.மண்டலபூஜை காலங்களில் இணையதளத்தின் மூலமும், உடனடி முன்பதிவு முறைகளின் கீழ் தினமும் 80,000 பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.