உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் நாளை இரவு 10:00 மணி வரை மட்டுமே தரிசனம்

சபரிமலையில் நாளை இரவு 10:00 மணி வரை மட்டுமே தரிசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: சபரிமலையில் ஜன.,14-ல் மகரஜோதி தரிசனம் நடந்தது.டிச.,31-ல் தொடங்கிய நெய்யபிஷேகம் இன்று(ஜன.,18) காலை 10:30 மணிக்கு நிறைவு பெறும். தொடர்ந்து களபாபிஷேகம் நடைபெறும். நாளை இரவு 10:00 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் உண்டு. நாளை மாலை 6:00 மணி வரை மட்டுமே பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.ஜன., 20 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் கணபதி ஹோமம் நடைபெறும். தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதி ராஜராஜ வர்மா ஐயப்பனை தரிசனம் செய்வார். மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி மன்னர் பிரதிநிதி முன்னிலையில் ஐயப்பனை யோக நிலையில் அமர்த்தி நடை அடைத்து 18 படிகளுக்கு கீழே வருவார்.அங்கு கோயிலுக்கான சாவி, வருமானம் என்று கூறி பண முடிப்பும் மன்னர் பிரதிநிதியிடம் மேல் சாந்தி வழங்குவார். அவர் அவற்றை கோயில் நிர்வாக அதிகாரியிடம் கொடுத்து வரும் காலங்களிலும் பூஜைகள் தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் புறப்பட்டு செல்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pmsamy
ஜன 18, 2025 11:13

நாளை மறுநாள் முதல் ஐயப்பன் ஓய்வு எடுப்பார் .


sundarsvpr
ஜன 18, 2025 09:06

பூவுலகில் அவதாரம் செய்த பகவத் தம்பதிக்கு நம்மைப்போல் ஆச்சார அதுஷ்டானங்கள் உண்டு. இதில் இரவு எட்டு மணிக்கு நித்திரை. இதனை வருமானத்தை மட்டும் கருத்தில் கொண்டு இரவுபூராவும் நித்திரை செய்யவிடாமல் துன்புறுத்துகிறோம். போகிற போக்கை பார்த்தல் ஆண்டவன் எல்லாவற்றையும் கடந்தவன் என்ற நோக்கில் தினமும் திருமஞ்சனம் என்பது இல்லாமல்போய்விடும். விஸ்வரூபம் என்பதும் மறைந்துவிடும். பகவானை அன்புடன் கவனியுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை