உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரம்; முக்கிய நபர் கைது

சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரம்; முக்கிய நபர் கைது

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலின் துவாரபாலகர்கள் சிலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இக்கோவிலின் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து, 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.மேலும், தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்துள்ளது.இந்த விவகாரம் குறித்து கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. மறு புறம் தேவசம் போர்டின் ஊழல் கண்காணிப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இறுதி விசாரணை அறிக்கையை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான அந்த இரு வழக்குகளிலும், தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெயரே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழு இன்று கைது செய்துள்ளது. எஸ்பி பிஜோய் தலைமையிலான போலீசார், போத்தியிடம் நடத்தப்பட்ட நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டார். அவரை நாளை மதியம் ரன்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

duruvasar
அக் 17, 2025 15:33

ஸ்வர்ணம் திருட்டு , கிட்னி திருட்டு லாபம் எதிலே அதிகம். ஏடன்ஸ் நோ மேட்ச்.


M Ramachandran
அக் 17, 2025 12:02

இதுமாதிரி விரைவாக புலனாய்வு திருட்டு தீமுக்கா வால் வெளி வராது. அமுக்கி விடுவார்கள். ஊழல் செய்பவர்கள் ஊழலை ஒழிக்க முன்வர மாட்டார்கள். பழியை அப்பாவிகள் யார் மீதாவது போட்டு தப்பிப்பார்கள். நல்ல வேளையாக திருப்பதி மலையிலிருக்கும் திரு மலய பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் இல்லை. இருந்திருந்தால் திருட்டு கும்பலின் ஆட்சியில் மொத்த சொத்தும் குடும்ப சொத்தாகி ஸ்வாகா ஆகி இருக்கும். அங்கும் அருவருக்க செயல் ஒரு வேற்று மத முதல்வன் ஆனா வகையில் இந்து மதத்திற்கு எதிராக பல தில்லா லங்கடி வேலயை செய்ய அங்கு மக்கள் விழித்து கொண்டு அந்த கயவனை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் இங்கு நம் மக்கள் புத்தி மழுங்கி போதையில் கொறட்டை தூக்கத்தில் திருடர்களுக்கு சாமரம் வீசி கொண்டிருக்கிறார்கள்.


Radhakrishnan Harichandran
அக் 17, 2025 12:16

உண்மை, திராவிட மாடெல்லில் இருந்து திருப்பதி தப்பித்தது


vbs manian
அக் 17, 2025 10:00

ஐயப்பன் உடை அணிந்து திருட்டுகளில் ஈடுபட்டதாக செய்திகள் உண்டு. இப்போது அடிமடியிலேயே கை வைத்து விட்டார்கள்.


Ramesh Sargam
அக் 17, 2025 09:46

தமிழகத்தில் கோவில் சொத்துக்களை அங்கு உள்ள ஆளும் கட்சியே அபகரிக்கிறது. கேரளாவில் தனி நபர் ஒருவர் திருடியிருக்கினார். அவர் மட்டும் இந்த திருட்டை செய்திருக்கமுடியாது. அவருடன் உடந்தையானவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை