உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கால்களை இழந்தாலும், தன்னம்பிக்கை தைரியத்துடன் வாழும் சதானந்தன் மாஸ்டர்

கால்களை இழந்தாலும், தன்னம்பிக்கை தைரியத்துடன் வாழும் சதானந்தன் மாஸ்டர்

ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள சதானந்தன் மாஸ்டர் கண்ணூரில், மட்டனூர் கிராமத்தில் பாரம்பரிய மார்க்சிஸ்ட் குடும்பத்தில் பிறந்தவர். உள்ளூரில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்து, வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் பி.எட். படித்தார். சொந்த மண்ணிலேயே ஆசிரியர் பணி மேற்கொள்ள வேண்டும் என்ற உணர்வுடன் கண்ணூர் மாவட்டத்திற்கு திரும்பிய சதானந்தன், அங்கேயே பணியில் சேர்ந்தார். கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்சத்தில் இருந்த காலம் அது. அக்கட்சியில் இருந்த சதானந்தன், அதன் சித்தாந்த கொள்கை பிடிக்காமல் வெளியேறினார். அங்கு, போட்டியாக இருந்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் 1984ல் சேர்ந்து, அதன் கிளையை தன் சொந்த கிராமத்தில் சதானந்தன் அமைத்தார். அடுத்த, 10 ஆண்டுகள், அந்த அமைப்பில் அவர் காட்டிய முழு ஈடுபாடு, மார்க்சிஸ்ட் கட்சியினரை அதிர செய்தது. இதன் விளைவாக, 1994ல், குடியரசு தினத்துக்கு முந்தைய நாள், பஸ்ஸில் வீடு திரும்பிய சதானந்தனை, அக்கட்சியினர் வழிமறித்து, அவரின் இரண்டு கால்களையும் துடிதுடிக்க வெட்டினர். ஆனாலும் சதானந்தன் துவண்டுவிடவில்லை. செயற்கைக்கால்களுடன் நடமாடினார். அதன் பின் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்காக கூடுதல் உத்வேகத்துடன் பணியாற்றினார். தன் 61வது வயதில் ஆசிரியராகவே வாழ்ந்து வரும் சதானந்தனின் உழைப்பை பார்த்த பா.ஜ., கண்ணூரின் கூத்துபரம்பா தொகுதியில், அவரை 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட செய்தது. இரு தேர்தல்களிலும் சதானந்தன் தோல்வியை தழுவினார். இந்த தோல்வியும் அவரை பாதிக்கவில்லை. தன் சமூகப் பணியை மேலும் சிறப்பாக தொடர்ந்தார். பா.ஜ.,வின் ராஜ்ய சபா எம்.பி.,யாக சதானந்தன் நியமிக்கப்பட்டது, அவரின் தைரியம் மற்றும் தியாகத்துக்கு கிடைத்த பரிசாகவே பார்க்கப்படுகிறது. -நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Naga Subramanian
ஜூலை 15, 2025 20:35

எந்த செயலிலும் தன்னையே அர்ப்பணித்து ஈடுபடுபவர்களுக்கு உரிய மரியாதை, தனது வாழ்நாளில் நிச்சயம் கிடைக்கும் என்பது உண்மை.


raj82
ஜூலை 15, 2025 19:40

40 years RSS வாட் ஆ dedication


N Sekhar
ஜூலை 15, 2025 15:01

வாழ்த்துக்கள் சதானந்தன் மாஸ்டர் அவர்களுக்கு


N Annamalai
ஜூலை 15, 2025 14:22

உங்கள் உழைப்பு விடாமுயற்சி எல்லோருக்கும் பாடம் .உங்களை மாநில ஆளுநராக்கி பெருமை செய்யலாம் .


sasikumar
ஜூலை 15, 2025 12:53

நல்வாழ்த்துக்கள் ஜி ....


lana
ஜூலை 15, 2025 12:14

நான் கூட உண்டி குலுக்கி மீது கொஞ்சம் நல்ல எண்ணங்கள் கொண்டு இருந்தேன். ஆனால் சமீபகாலமாக அவர்கள் கான்செப்ட் குறித்து படித்த போது தான் அவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரியவந்தது. இது ஒரு உதாரணம்


SANKAR
ஜூலை 15, 2025 13:00

only Marxist and Maoist extremists do that.Normal communists no longer indulge in murderous attacks...


SANKAR
ஜூலை 15, 2025 11:07

Shame on Keralites for making him loss in elections twice


Kulandai kannan
ஜூலை 15, 2025 11:05

மனிதனை மிருகமாக்கும் தத்துவம் கம்யூனிஸம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 15, 2025 09:55

நான்கூட எதோ சமூக சேவகருக்குத்தான் எம்பி பதவி கொடுத்திருக்காங்கன்னு நெனைச்சேன்.


Chanakyan
ஜூலை 15, 2025 11:35

உலகின் கட்சியின் பதவிகள் எல்லாமே அவர் தம் சொந்த கட்சியினருக்குத் தான் என்பது இயல்பான நிலைமை. எனவே இந்த கருத்துப் பதிவு அறியாமையை அல்லது பாஜக மீதான வன்மத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 15, 2025 13:13

திரு சாணக்கியன் அவர்களே, ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் பதவிகள் அரசியல் கலப்பற்று சமூக சேவைகளில் ஈடுபட்டு மக்களோடு மக்களாக இணைந்து மக்களுக்காக பாடுபடும் அன்பர்களுக்கு அவர்களின் செயல்பாடுகளுக்கு தொண்டுகளுக்கு ஒரு அங்கீகாரமாக இருக்கும் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் இங்கும் ஆளும் கட்சிக்காரர்களுக்கே பதவிகள் என்று இருப்பது நியாயமில்லை. இதே சதானந்தன் மாஸ்டர் பாஜக கட்சியில் இணைந்து பணியாற்றாமல் தனியாக நின்று பொதுத்தொண்டு செய்திருந்தால் அல்லது வேறு கட்சிகளில் இணைந்து பொது தொண்டு செய்தால் அவருக்கு அங்கீகாரம் பதவி எதுவும் கிடையாது. அப்படித்தானே.


Jack
ஜூலை 15, 2025 15:00

தயிர்வடை படையல் போடும் பார்ட்டியா இவர்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 15, 2025 15:45

கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் அவர்களுக்கு எம்பி பதவி ஏன் கொடுக்கவில்லை என்று இப்போது புரிகிறது


Amsi Ramesh
ஜூலை 15, 2025 09:51

உண்டியல்களின் மறுபுறம் மிக கோரமானது அதற்கு இதுவே சாட்சி


Jack
ஜூலை 16, 2025 08:43

மறுபுறம் விரிசல் இல்லாம இருக்கும் .....