உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோத குடியேற்றத்துக்கு ஆதரவு: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா

சட்டவிரோத குடியேற்றத்துக்கு ஆதரவு: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவரான சாம் பிட்ரோடா, சட்ட விரோத குடியேற்றத்துக்கு ஆதரவாக பேசி, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.டில்லியில் வரும் பிப்.5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டவிரோதமாக வரும் வங்கதேசத்தவர்கள் பற்றி சாம் பிட்ரோடா கருத்து தெரிவித்துள்ளார். டில்லி அரசியலில் வங்கதேசத்தவர் சட்டவிரோத குடியேற்றம் ஒரு சூடான விஷயமாக உள்ளது. போலீசாரும் ஆங்காங்கே ரெய்டு நடத்தி வங்கதேசத்தவர்களை கைது செய்து வருகின்றனர்.இத்தகைய சூழ்நிலையில் தான், 'வங்கதேசத்தவர் வேட்டையாடப்படுகின்றனர்' என்று பிட்ரோடா பேசியுள்ளார். குறிப்பிட்ட அந்த வீடியோவில் சாம் பிட்ரோடா பேசியதாவது:பசியால் வாடும் ஏழைகளான குடியேறிகளை வேட்டையாடுவதை விட புவி வெப்பமடைதல் போன்ற பிரச்னைகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.அவர்கள் இங்கு வருவதற்கு நிறைய வேலை செய்கிறார்கள். சட்டவிரோத குடியேற்றம் தவறு என்றாலும், நாம் சட்டவிரோதமாக வந்த வங்கதேசத்தவர்களையும், சிறுபான்மையினரையும் குறிவைத்து பிடிக்க மும்முரமாக இருக்கிறோம்.நாம் அனைவரையும் உள்ளடக்க வேண்டும். நாம் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், யாரும் (வளங்களை) பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் வளத்தை அதிகரிக்கவே விரும்புகின்றனர்.இவ்வாறு சாம் பிட்ரோடா தெரிவித்தார்.சாம் பிட்ரோடா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியுள்ளதாவது:ராகுலின் வலது கரமான சாம் பிட்ரோடா, சட்டவிரோத குடியேறிகளுக்காக வாதிடுவது பொறுப்பற்றது.இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் எவ்வாறு நம் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் குடியேற்றுவதற்கு அனுமதித்தது என்று புரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.சாம் பிட்ரோடாவுக்கு சர்ச்சைகள் புதிதல்ல, கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, வட​​கிழக்கு மாநிலங்களில் உள்ள இந்தியர்கள் சீனர்களைப் போலவே இருக்கிறார்கள், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருக்கிறார்கள் என்ற அவரது கருத்து பரவலான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதையடுத்து பிட்ரோடா தனது பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

veeramani
ஜன 29, 2025 09:49

எந்த ஒரு இந்தியனும் அயல் நாட்டினர் இங்கு குடியுரிமை பெறுவதை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி விரும்பினால் இத்தாலி நாட்டிற்கு செல்லவும்


பேசும் தமிழன்
ஜன 29, 2025 08:02

வாறவன்.. போறவன்.... எல்லாம் வந்து தங்க எங்களுடைய நாடு என்ன சத்திரமா.... உன் வீட்டில் அந்நியன் யாராவது வந்து இருந்து கொண்டால் நடக்குமா ???..... வந்துட்டான் இத்தாலி அடிமை முட்டு கொடுக்க !!!


naranam
ஜன 29, 2025 02:52

இந்த தேச துரோகியை அதிபர் ட்ரும்ப் கைது செய்வார்..இவருடன் பன்னுன் என்ற சீக்கிய தீவிரவாதியும் விரைவில் நாடு கடத்தப் பட வேண்டும்


Anonymous
ஜன 29, 2025 11:14

சார், கைது செய்து நாடு கடத்தவேண்டாம், அங்கேயே சிறையில் அடைத்து வைத்து, நல்லா நொங்கு எடுக்கட்டும், நாடு கடத்துனா, இங்கே இந்தியாவுக்கு தான் வருவாங்க, இந்த சாம் மற்றும் பண்ணு, இங்கே வந்து இன்னும் பிரச்சினை செய்யவா? வேண்டாம் சார், போதும், அங்கே அமெரிக்காவிலேயே சிறையில் அடைத்து வைத்து பார்த்து கொள்ளுவது, நம்ம நாட்டுக்கு நல்லது.


Murugesan
ஜன 28, 2025 21:31

ஆட்சியில இருக்கும் போது என்னென்ன கேவலமான செயல்களை செய்து இருப்பானுங்க அந்நிய நாட்டு கைக்கூலி...


m.n.balasubramani
ஜன 28, 2025 20:41

நமது சட்ட திட்டங்களை முதல மாற்றணும் .


Ramesh Sargam
ஜன 28, 2025 20:17

ஏய் சாம், முதலில் நம் நாட்டில் உள்ள பசியால் வாடும் ஏழை எளியவர்களை நாம் காப்பாற்றலாம். பிறகு மற்றநாட்டு ஏழை எளியவர்களை காப்பாற்றலாம். அதாவது அவர்களுக்கு இங்கிருந்து பசியை போக்க தேவையான பொருட்களை கொடுத்து. எதற்காக அவர்களை நம் நாட்டிற்குள் அனுமதிக்கவேண்டும்? புரிந்து விட்டது உன் எண்ணம். ஆம், அவர்கள் இங்கு வந்தால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்குத்தான் அவர்கள் இங்கே வரவேண்டும் என்றும் கூறுகிறாய்.


Priyan Vadanad
ஜன 28, 2025 20:11

சாம் பரோட்டா வீட்டுக்குள் பக்கத்துக்கு தெருக்காரர் ரகசியமாக, கள்ளத்தனமாக நுழைந்து, நானும் இங்குதான் இருப்பேன் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்க்கிறேன்.


sridhar
ஜன 28, 2025 22:08

அது மைனாரிட்டி என்றால் இவர் ' எல்லா ' சலுகையும் கொடுப்பாராம் .


Priyan Vadanad
ஜன 28, 2025 20:07

சாம் பரோட்டா, அவர்களது கருத்துக்களை, பேச்சு சுதந்திரம் இருக்கும் அமெரிக்காவில் சொன்னால் ரொம்ப பலன் கிடைக்கும்.


Sundar R
ஜன 28, 2025 19:38

சாம் பிட்ரோடா, வினேஷ் ஃபோகா & மணிசங்கர் அய்யர் ஆகியோரைப் போல் நல்ல என்டர்டெயின்மென்ட் கொடுப்பவர்கள் யாரும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.


Sivagiri
ஜன 28, 2025 19:20

இவன் ஜான்பிரிட்டோவா இல்ல கான்பிரிட்டோவா


புதிய வீடியோ