உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அறியாமையால் புகார் கூறும் சாம் பிட்ரோடா: கல்வி அமைச்சகம் கண்டனம்!

அறியாமையால் புகார் கூறும் சாம் பிட்ரோடா: கல்வி அமைச்சகம் கண்டனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப்பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா கூறிய குற்றச்சாட்டுகளை மத்திய கல்வி அமைச்சகம் நிராகரித்து கண்டனம் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா. சோனியா, ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர். தான் பேசும் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை. கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, அமெரிக்காவை போல் இந்தியாவிலும் பரம்பரை வரி விதிக்க வேண்டும் என கூறினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=udrgdbn5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவருடைய கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. அடுத்து, இந்தியர்களின் நிறம், இனங்களை ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையில் சிக்கினார். நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன்பும் அவரது பேச்சுகள் விவாதங்களுக்கு உள்ளானது.இப்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் சாம் பிட்ரோடா.ராஞ்சி ஐ.ஐ.டி. மாணவர்களுடன் கடந்த 22ம் தேதி ஆன்லைன் கருத்தரங்கில் பேசியபோது, ஆபாச படங்களை புகுத்தி சிலர் தொந்தரவு செய்ததாகவும், ஜனநாயகத்தில் இது ஏற்புடையதா என சாம் பிட்ரோடா கேள்வி எழுப்பி இருந்தார். அவருடயை கருத்தை மத்திய கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது. சாம் பிட்ரோடா சொல்வதுபோல் அப்படி ஒரு ஐ.ஐ.டியே ராஞ்சி நகரில் இல்லை. அங்கு ஐ.ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம்தான் இருக்கிறது. அவர்களும் சாம் பிட்ரோடாவை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். சாம் பிட்ரோடா அடிப்படையே இல்லாத கருத்துகளை கூறி, அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.நாட்டில் சிறப்பாக செயல்படும் உயர் கல்வி நிறுவனத்தின் புகழை கெடுக்கும் வகையில் அவருடைய கருத்து பொறுப்பற்றதாக இருக்கிறது. இவ்வாறு மத்திய கல்வி அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கண்ணன்
பிப் 28, 2025 12:14

அக்கட்சியில் உள்ள அனைவருமே அறிவு என்றால் கிலோ எவ வளவு என்றுதான் கேட்பர்


MARUTHU PANDIAR
பிப் 27, 2025 21:54

இவன் ஒரு சோரோஸின் நம்பிக்கையான சேவகன்...வாங்கிய காசுக்கு அதிகமாய் கூவிக் கொண்டிருக்கிறான் ..இந்த நாட்டின் தலையெழுத்து .


MARUTHU PANDIAR
பிப் 27, 2025 21:52

இவனை ஒரு பெரிய மேதாவி என்று எண்ணி தொலைத்தொடர்பு துறையின் தலைவனாக்கி விட்டது ராஜிவ். .அதாவது அரசியல் அனுபவம் கிடையாது .அதுவுமில்லை ..., நாட்டின் கலாச்சாரத்தை ,பரம்பரியத்தை பற்றி ஓரளவு அறிந்திருக்க வேண்டாமா ? இப்படிப்பட்ட தன்னுடைய அயல் நாட்டு வகுப்புத் தோழர்கள் எல்லாரையும் கொண்டு வந்து அமைச்சர் மற்றும் மற்ற உயர் பதவிகளிலும் அமர்த்தினால் காரியம் ஆச்சு என்று நாட்டை கெடுத்த ஆளு .வெளி நாட்டை காப்பி அடித்து வாரத்துக்கு 5 நாள் வேலையை கொண்டு வந்து இருப்பதையும் குட்டிச்சுவர் ஆக்கிய ஆளு ராஜிவ் .


தி. குமார், மதுரை
பிப் 27, 2025 21:50

திராவிடனுங்க உருட்டுறதுல கில்லாடிக! IIIT என்பது செகண்ட் ரேங்க் IIT யாம்… IIIT என்பது Indian Institute of Information Technology. இதற்கு JEE main exam போதும். முதல்ல துண்டுச்சீட்ட ஒழுங்காப் படிங்கப்பா


Sampath Kumar
பிப் 27, 2025 20:08

அவரு ஒன்னும் இல்லத்தை சொல்ல இல்லை இருப்பதாய் தான் சொல்லி உள்ளார் கல்வி ஆலட்கள்க்கு நற்றாய் தெய்ரயும் அமைசஹ்ருக்கு ?? புரியாது


அப்பாவி
பிப் 27, 2025 19:41

IIIT ஒரு செகண்ட் க்ரேட் IIT. பெரிய வித்தியாசம் இல்லை. அவர் கருத்து கூறியது ஒரு ஆன்லைன் கருத்தரங்கில். அதற்காக அவர் ராஞ்சிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை.


V.Mohan
பிப் 27, 2025 19:25

காங்கிரஸ் கலகலத்துப்போனதுக்கு இந்த அரைகுறை மனிதனும் ஒரு காரணம். ராஜீவ் காந்தியை தவறாக வழி நடத்தி அவரது அரசியல் வாழ்க்கையை முடித்து வைத்த பிரகிருதி, இப்போது அரைகுறை ராகுல் காந்தியையும் முழுசாக முடித்து வைக்க புறப்பட்டுள்ளார். இவரது அரேஞ்ச்மெண்டில் தான் உயர்கல்வி மாணவர்கள் ராகுல் காந்தியை சந்திக்கும்ஆள்பிடித்து கூட்டங்களுக்கு ,ஏற்பாடு செய்யப்படுகிறது. எல்லா பொருட்செலவுக்கும் இத்தாலி மாமியா,மற்றும் சோரோஸ் பொறுப்பு. இந்தியாவையும்,மோடியையும், அமித்ஷாவையும் கன்னா பின்னா என்று திட்டவும், குற்றம் சுமத்தவும் கூட்டம் நடத்தி பிபிசி.க்கு அறிக்கை தரப்படும். திரும்ப திரும்ப ஒரே தோசையை திருப்பிப் போடும் காங்கிகள் மெண்டலாகிவிட்டனர்.


Gopal
பிப் 27, 2025 17:58

இப்படி பட்டவன்தான் பப்புவுக்கு நண்பனா இருப்பான்.


புதிய வீடியோ