உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரத்பவார் கட்சி நன்கொடை வசூலித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி

சரத்பவார் கட்சி நன்கொடை வசூலித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி

புதுடில்லி: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலையொட்டி, சரத்பவார் தலைமையிலான கட்சி தேர்தல் நன்கொடை வசூலித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மஹாராஷ்டிராவில் இவரது தலைமையில் இருந்த தேசியவாத காங்., கட்சி கடந்தாண்டு ஜூலை மாதம் இரண்டாக பிளந்தது. இதில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங். கட்சிதான் உண்மையானது என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. அஜித்பவார் பா.ஜ., சிவசேனா கூட்டணி அரசில் இடம் பெற்று துணை முதல்வராக உள்ளார்.இதையடுத்து சரத்பவார் தலைமையிலான கட்சிக்கு தேசியவாத காங்., சரத் சந்திரபவார் எனவும் தேர்தல் ஆணையம் பெயர் அளித்துள்ளது. இந்நிலையில் இம்மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., சரத் சந்திரபவார் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anbuselvan
ஜூலை 09, 2024 13:37

அப்புறம் என்ன வேட்டையை ஆரம்பிச்சு விட வேண்டியதுதானே


தத்வமசி
ஜூலை 09, 2024 10:29

பத்து ஏக்கரில் விவசாயம் செய்து பல கோடி லாபம் பார்த்த குடும்பம். இப்போது வசூலில் இறங்கி விட்டது. பிஜேபியை வாய்க்கு வந்தபடி வசைவு பாடியவர்கள் இப்போது வசூல் செய்வதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றம் செல்கின்றனர்.


ஆரூர் ரங்
ஜூலை 09, 2024 09:15

ரொக்கமாக வாங்கி வாயில் போட்டுக் கொள்ள சிறந்த வழி. குடும்பக் கார்பரேட் கட்சிகளை காத்து அதன் மூலமாக நீதி ஜனநாயகத்தைக் காக்கிறது.


N Srinivasan
ஜூலை 09, 2024 06:44

இதே நீதி மன்றங்கள் தேர்தல் பத்திரம் மூலமாக பணம் வாங்கினால் அது குற்றம் என்று கூறியது இப்போது இவர் வாங்கும் பணம் எவ்வளவு என்று யாருக்கு தெரியும்


Kasimani Baskaran
ஜூலை 09, 2024 05:34

எப்படி இருந்த இவர் இப்படி ஆகிவிட்டார்...


மேலும் செய்திகள்





புதிய வீடியோ