உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெட்ரோல் - எத்தனால் கலப்பால் ரூ.24,300 கோடி சேமிப்பு

பெட்ரோல் - எத்தனால் கலப்பால் ரூ.24,300 கோடி சேமிப்பு

புதுடில்லி: பெட்ரோல் - எத்தனால் கலவை வாயிலாக, 24,300 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவணியை, 2022 - 23 எத்தனால் ஆண்டில் சேமிக்க முடிந்ததாக, மத்திய பெட்ரொலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து உள்ளார்.கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகள் மற்றும் கார்பன் உமிழ்வுகள் ஆகியவற்றை குறைக்கும் நோக்கில், 'இ - 20' கலவை முறையை அரசு கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தியது. இ - 20 என்பது, பெட்ரொலில் 20 சதவீத எத்தனால் கலப்பதை குறிக்கும்.தற்போது 9,300க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில், இ - 20 எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, 24,300 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவணி சேமிக்க முடிந்ததாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 2024 - 25க்குள், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலையும், 2029- - 30க்குள், 30 சதவீதத்தையும் அடைய அரசு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ajp
ஜன 06, 2024 00:27

கலப்பட பெட்ரோல்.அதிக விலைக்கு நாங்கள் வாங்குகிறோம். நீங்கள் வாழ்க


Vathsan
ஜன 05, 2024 15:51

சரி அந்த விலை குறைப்பின் பயனையாவது பொதுமக்களுக்கு கிடைக்கும்படி செயது இருக்கலாமே? இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் பெட்ரோல் விலை 103 என்ற அளவிலேயே இருக்கும்? ரஷ்யா விடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிய போதும் குறைத்த பாடு இல்லை. பெட்ரோல் பேரல் விலை உலகளாவிய அளவில் குறையும் போதும் நீங்கள் குறைப்பது இல்லை.


Balasubramanian
ஜன 05, 2024 13:32

TASMAC இல் எத்தனால் விற்பதால் நிறைய லாபம் ஆனால் மக்கள் நஷ்டம் அடைகின்றனரே


Krish
ஜன 05, 2024 11:09

பெட்ரோல் & வாட்டர் கலப்பால் எத்தனைகோடி கொள்ளை??


Duruvesan
ஜன 05, 2024 10:01

அப்பு கலாய்க்கிறராம்


RADE
ஜன 05, 2024 08:48

வாங்காத பெட்ரோல் அதனால் மிச்சம் ஆனா கணக்கு மட்டும் சொல்லுகிறீர்கள், அதற்க்கு ஈடாக உள்நாட்டில் எத்தனால் உற்பத்தி, கலப்பு என்று அதற்கு அதற்க்கு ஆனா செலவு பற்றி ஒன்னும் கூறவில்லை.


அப்புசாமி
ஜன 05, 2024 07:25

எங்க தமிழ்நாடு பெட்ரோல் பங்க்கில் தண்ணீரைக்.கலந்து இன்னும் நிறையவே சேமிக்கிறாங்களே...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை