உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரும்பி வந்துட்டேன்னு சொல்லு; இந்திய ராணுவத்தில் மீண்டும் இணையும் துருவ்

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு; இந்திய ராணுவத்தில் மீண்டும் இணையும் துருவ்

புதுடில்லி: இந்திய ராணுவத்தில் மீண்டும் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் துருவ் ஹெலிகாப்டர் இணைகிறது. விரைவில் இந்திய ராணுவத்தில் துருவ் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'துருவ்' இலகு ரக ராணுவ ஹெலிகாப்டர் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு விமானிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டதன் காரணமாக கடற்படை மற்றும் விமானப்படை இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதை நிறுத்தி வைத்தன. ராணுவத்திலும், இந்த துருவ் வகை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டன.இந்நிலையில் இன்று(மே 01) இந்திய ராணுவத்தில் மீண்டும் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் துருவ் ஹெலிகாப்டர் இணைகிறது. விரைவில் இந்திய ராணுவத்தில் துருவ் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகள் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டதால், துருவ் ஹெலிகாப்டர்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பாதுகாப்புத்துறையின் Defect Investigation Committeeன் ஆய்வுக்கு பிறகு மீண்டும் இந்திய ராணுவத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்திய ராணுவத்தில் துருவ் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் முடக்கப்பட்டிருந்த துருவ் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALH) மீண்டும் நடவடிக்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nada Rajan
மே 01, 2025 21:33

வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்


Ramesh Sargam
மே 01, 2025 20:40

முற்றிலும் திரும்பி வரவேண்டியது காஷ்மீர். Pakistan Occupied Kashmir என்பதே இருக்கக்கூடாது. காஷ்மீர் எல்லாப்பகுதியும் இந்தியாவுக்கு திரும்பிவரவேண்டும். அங்குள்ள பாகிஸ்தானியர்களை, பாக்கிஸ்தான் வளர்க்கும் தீவிரவாதிகளை அடியோடு துரத்திவிட்டு, அல்லது அழித்துவிட்டு, மஷமீர் முழுவதையும் திரும்ப பெறுங்கள்.


சமீபத்திய செய்தி