உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 நாள் திட்டத்தில் மோசடி: விருதுநகரில் ரூ.34 கோடி இழப்பு

100 நாள் திட்டத்தில் மோசடி: விருதுநகரில் ரூ.34 கோடி இழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடக்கும் 100 நாட்கள் வேலை திட்டத்தில் மூன்று மாநிலங்களில் நடந்த மோசடி காரணமாக ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டது அம்பலம் ஆகி உள்ளது. அதில் விருதுநகரில் மட்டும் 34.02 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் உள் தணிக்கைக்குழு, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து பல்வேறு மாநிலங்களில் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்து உள்ளது.அதில், 2023-24ம் நிதியாண்டில் இந்த திட்டத்தில், பல்வேறு முறைகேடுகள் காரணமாக 3 மாநிலங்களில் ரூ.35.37 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதில், தமிழகத்தின் விருதுநகரில் ரூ.34.02 கோடியும் ராஜஸ்தானின் நகாவூரில் ரூ.1.09 கோடியும் ம.பி.,யின் மொரினாவில் ரூ.26 லட்சமும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.மேலும் இந்த உள் தணிக்கை குழுவானது, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட 92 பணிகளையும் ஆய்வு செய்துள்ளது.அதில்,மணிப்பூரில் பெர்ஜவால் மாவட்டத்தில் பிரதமர் கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டம் அமல்படுத்தப்பட்டதில் ரூ.5.20 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.இதனுடன் மேற்கண்ட இரண்டு திட்டங்கள் மற்றும் பிரதமர் கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் பணம் அனாவசியமாகவும், சட்டவிரோதமாகவும் செலவு செய்யப்பட்டு உள்ளது. குஜராத், சிக்கிம், மணிப்பூர், ஒடிசா, கேரளா, ஹிமாச்சல பிரதேசம், மிசோரம், ஆந்திரா, அசாம், ம.பி., ராஜஸ்தான் மற்றும் பீஹார் மாநிலங்களில் ரூ.15.20 கோடி தேவையின்றி செலவு செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2022 - 23 நிதியாண்டில் இந்த திட்டங்களின் கீழ் ரூ.23.17 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்ததை இந்தக் குழு கண்டுபிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

raja
நவ 04, 2024 01:09

திருட்டுடா... திராவிடம் டா..விடியல் டா மாடல் டா... சுருட்டுடா.. காரி துப்புடா...


KRISHNAN R
நவ 03, 2024 20:47

2009 இல் இந்த திட்டம் நல்ல நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. செயல் பா டு.. தோல்வி


என்றும் இந்தியன்
நவ 03, 2024 19:09

100 நாள் திட்டத்தில் மோசடி : தமிழகத்தின் விருதுநகரில் ரூ.34.02 கோடியும் ராஜஸ்தானின் நகாவூரில் ரூ.1.09 கோடியும் ம.பி.,யின் மொரினாவில் ரூ.26 லட்சமும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதைத்தான் டாஸ்மாக்கினாடு எல்லாவற்றிற்கும் முன்னோடி முதலில் உள்ளது என்று சொல்வது திருட்டு திராவிட அறிவில் மடியில் அரசில்


Edwin Jebaraj T , Tenkasi
நவ 03, 2024 17:47

காலையில் பத்து மணிக்கு வேலைக்கு வந்து , டீ போட்டு குடித்துவிட்டு சுமார் 11.30 மணியளவில் வேலை செய்கிறேன் என்ற பெயரில் 12.30 வரை ஒரு மணி நேரம் சுமார் 150 நபருக்கு மேற்பட்ட ஆட்கள் மண்ணை கிளருகிறேன் என்ற பெயரில் சுற்றிவிட்டு சாப்பிட்ட பின் 3 மணியிலிருந்து 3.30 வேலை செய்கிறேன் என்ற பெயரில் ஊர் வம்பு பேசிவிட்டு ( இதெல்லம் எங்கள் ஊரில் நடப்பது ) செல்லும் இது போன்ற கையாலாகாத திட்டம் தேவையா. அரசு உடனடி நடவடிக்கை எடுத்து விவசாய வேலைகளுக்கு தடையாக இருக்கும் இந்த திட்டத்திற்கு நிரந்தர மூடுவிழா நடத்துவதே சிறந்தது.


Oru Indiyan
நவ 03, 2024 16:52

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ராகுலின் நெருங்கிய நண்பர் மாணிக்கம் தாகூர் .. செய்த ஊழலா?


Kumar Kumzi
நவ 03, 2024 16:31

இது திருட்டு திராவிஷ மாடலின் பகல் கொள்ளை


ஆரூர் ரங்
நவ 03, 2024 16:16

காமராசர் ஊரிலேயே..


S. Gopalakrishnan
நவ 03, 2024 14:33

அகில இந்தியாவில் முப்பத்து ஐந்து கோடி ஊழல் அதில் தமிழகத்தில் - இல்லை, இல்லை - விருதுநகரில் மட்டும் முப்பத்து நான்கு கோடி ஊழல்! அடுத்து உலகளவில் பெரிய ஊழல் செய்து சாதனை படைக்க வாழ்த்துக்கள் !


SUBBU,MADURAI
நவ 03, 2024 16:00

மத்திய அரசின் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தால் விவசாயிகள் படும்பாடு சொல்லி மாளாது. என்றைக்கு இந்த திட்டம் வந்ததோ அன்றிலிருந்து வயல்களுக்கு நாற்று நடுவது, உரமிடுவது, களையெடுப்பது போன்ற விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில்லை இதனாலேயே பல விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்வதையே நிறுத்தி விட்டார்கள். எங்களுக்கு மேலூர், மற்றும் திருப்புவனத்தில் இருக்கும் நன்றாக விளையக் கூடிய 24 ஏக்கர் விவசாய நிலத்தில் அனைத்திலும் பயிரிட வேலைக்கு ஆள் கிடைக்காமல் சும்மா பெயருக்கு முணு, நாலு ஏக்கரில் மட்டும் என் தந்தை எங்களின் வீட்டுத் தேவைக்காக அதற்குத் தக்கவாறு பயிர் செய்து வருகிறார் எங்களின் மற்ற நிலங்கள் எல்லாம் தரிசாக கிடக்கின்றன. அவர் இருக்கும் வரை விவசாயம் செய்வதை நிறுத்த மாட்டார். இதற்கிடையில் இப்போது தரிசாக கிடக்கும் எங்கள் நிலங்களை பிளாட் போட்டு நல்ல விலைக்கு விற்று தருகிறோம் என்று இடம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்கள் ஐடியா கொடுத்து தினமும் ஆட்களை வேறு கூட்டிக் கொண்டு வருகிறார்கள். எங்களைப் போன்ற நிலைமைதான் தமிழகத்தில் உள்ள பல விவசாயிகளுக்கும். இதெற்கெல்லாம் மூல காரணம் மத்திய அரசு கொண்டு வந்த அந்த நூறு நாட்கள் வேலை திட்டம்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.


என்றும் இந்தியன்
நவ 03, 2024 19:17

The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act MNREGA is Indias landmark social welfare initiative to eradicate poverty and unemployment in rural areas, Enacted in 2005 by Whom????


velayutham Rajeswaran
நவ 03, 2024 14:08

இந்த திட்டம் மிகப்பெரிய மோசடி திட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டிய திட்டம்


GMM
நவ 03, 2024 13:25

உன் தணிக்கை குழு தடையின் படி, நிதி இழப்பை ஈடு செய்ய வேண்டும். அதன்பின் தான் குற்ற நடவடிக்கை. மேலும் காங்கிரஸ் கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டம் சரியல்ல. மனித சக்தி தேவைப்படும் விவசாயம் , மில், தொழில் கூடம்.. அனுப்பி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். முதலில் பயிற்சி கொடுக்க வேண்டும். எந்த ஒரு கட்சியின் புதிய குறுகிய கால கொள்கை அது ஆட்சி செய்த போது மட்டும் செல்லும். பின் தானே செயல் இழந்து விட வேண்டும்.


சமீபத்திய செய்தி