உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதி கட்டணத்தை டிபாசிட் செய்ய பள்ளி மாணவர்களுக்கு உத்தரவு

பாதி கட்டணத்தை டிபாசிட் செய்ய பள்ளி மாணவர்களுக்கு உத்தரவு

இந்தியா கேட்:உயர்த்தப்பட்ட கட்டணத்தில் 50 சதவீதத்தை டிபாசிட் செய்யும்படி மாணவர்களின் பெற்றோருக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாணவர்களிடம் துவாரகா டில்லி பப்ளிக் பள்ளி திடீரென பல மடங்கு கட்டணத்தை வசூலிப்பதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இதுதொடர்பாக 100க்கும் மேற்பட்ட பெற்றோர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு பள்ளியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை நீதிமன்றம் நியமித்த கமிட்டி சுட்டிக்காட்டியது.இந்த நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2025 - 26 கல்வி ஆண்டிற்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தில் 50 சதவீதத்தை டிபாசிட் செய்யும்படி மாணவர்களின் பெற்றோருக்கு நீதிபதி விகாஸ் மகாஜன் உத்தரவிட்டார்.அத்துடன் சம்பந்தப்பட்ட மாணவர்களை வகுப்புக்கு எந்த வித நிபந்தனையுமின்றி அனுமதிக்கும்படி பள்ளி நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.பள்ளி, துணைநிலை கவர்னர், மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, நான்கு வாரங்களுக்குள் பதில்களை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கு, ஆகஸ்ட் 28ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை