உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமரை அவமதித்து பேசிய பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்

ராமரை அவமதித்து பேசிய பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்

மங்களூரு: ஸ்ரீராமரை அவமதிப்பாக பேசிய, செயின்ட் ஜெரோசா பள்ளி ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தட்சிண கன்னடா, மங்களூரில் செயின்ட் ஜெரோசா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு ஆசிரியை சிஸ்டர் பிரபா. பிப்ரவரி 8ல் இவர், 'ஒர்க் ஈஸ் ஒர்ஷிப்' என்ற தலைப்பில் பாடம் நடத்தினார். அப்போது அவர், அயோத்தி ராமரை கல் என, அவமதித்து பேசினார்.இதையறிந்து, கொதிப்படைந்த மாணவர்களின் பெற்றோர், ஹிந்து அமைப்பினர், ராமரை அவமதித்த ஆசிரியை பிரபா மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். மூன்று நாட்களாகியும், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, மங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., வேத வியாஸ் காமத் தலைமையில், ஹிந்து அமைப்பினர், நேற்று மதியம் போராட்டம் நடத்தினர். பள்ளியை முற்றுகையிட முயற்சித்தனர். மாணவர்களின் பெற்றோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.தகவலறிந்து அங்கு வந்த மங்களூரு போலீசார், பள்ளி கேட் அருகில், எம்.எல்.ஏ.,வையும், பெற்றோரையும் தடுத்து நிறுத்தினர். இவர்களின் நெருக்கடிக்கு பணிந்த பள்ளி நிர்வாகம், ஆசிரியை பிரபாவை சஸ்பெண்ட் செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி