வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காவிரி ஆற்றிலும் தொடங்க யோசிக்கலாமே. பல ஊர்களின் பயண நேரம் குறையும். பல ஊர்களுக்கு விமானம் கிடைக்கும்
புவனேஸ்வர்: “வரும் அக்டோபர் மாதத்திற்குள், இரு வழித்தடங்களில் கடல் விமான சேவை மீண்டும் துவங்கும்,” என, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். ஒடிஷாவின் புவனேஸ்வரில் கிழக்கு பிராந்தியத்துக்கான சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்களின் மாநாடு நேற்று நடந்தது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் நடந்த விழாவை, முதல்வர் மோகன் சரண் மாஜி துவக்கி வைத்தார். விதிமுறைகள் விமான போக்குவரத்து இணையமைச்சர் மோஹோல் முரளிதர், சத்தீஸ்கர் அமைச்சர் ஓம் பிரகாஷ் சவுத்ரி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேசியதாவது:
நம் நாட்டில், ஒரு வழித்தடத்தில் மட்டுமே கடல் விமான சேவை இருந்தது. அதுவும் தற்போது செயலற்றதாக உள்ளது. தற்போது, கடல் விமானங்களை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு எளிமைப் படுத்தியுள்ளது. நீர் வழிப் பாதை அமைப்பதற்கான விதிமுறைகள், விமானிகளுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் கடல் விமான செயல்பாடுகளை நிர்வகிக்கும் விதிகள் மற்றும் விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அக்டோபர் மாதத்திற்குள் அந்தமான் - நிக்கோபார், கேரளா அல்லது ஆந்திராவில் இரண்டு கடல் விமான சேவை துவங்கப்படும்.
யோசனைகள்
இந்த சேவையை, ஒடிஷாவின் சிலிகா ஏரி மற்றும் முழு கிழக்கு கடற் கரைக்கும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5 அடிக்கு மேல் ஆழம் மற்றும் 656 அடி தரையிறங்கும் இடமுள்ள எந்த நீர்நிலையிலும் இந்த சேவையை து வங்கலாம். கடல் விமான சேவைகளுக்கு, எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்புள்ளது. எனவே, இதை விரிவுபடுத்த புதுமையான யோசனைகள் மற்றும் புதிய இடங்களுடன் மாநிலங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி ஆற்றிலும் தொடங்க யோசிக்கலாமே. பல ஊர்களின் பயண நேரம் குறையும். பல ஊர்களுக்கு விமானம் கிடைக்கும்