உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீக்ரெட் சிங்காரம்!

சீக்ரெட் சிங்காரம்!

நடிகர் மீண்டும் போட்டி?மத்திய அரசயும், பிரதமர் மோடியயும் விமர்சிச்சி பேசிட்டு வர்ற, பிரகாசமான' தமிழ் நடிகரு ஒருத்தரு, கடந்த லோக்சபா தேர்தல்ல, பெங்களூரு மத்திய தொகுதியில போட்டியிட்டு படுதோல்வி அடைஞ்சாரு. வர்ற லோக்சபா தேர்தல்லயும், அந்த நடிகரு மீண்டும் போட்டியிடுவாரான்னு, அவரோட ரசிகர்கள் எதிர்பார்த்துட்டு இருக்காங்க. ஆனா நடிகர்கிட்ட இருந்து, இதுவர எந்த பதிலும் வரலையாம். ஆனாலும் நடிகர சந்திச்சு, நீங்க மறுபடியும் போட்டியிடணும்னு வற்புறுத்த ரசிகர்களும், அவரோட நலம் விரும்பிகளும் ரெடி ஆகிட்டு வர்றாங்களாம்.நட்சத்திர பேச்சாளர் பட்டியல்!தேர்தல் என்றாலே வாக்காளர்கள் எதிர்பார்ப்பது, நட்சத்திர பேச்சாளர்கள தான். இவங்க தான் அரசியல்வாதிகள விட, வாக்காளர்கள பேச்சால வசியம் பண்ண கூடியவங்க. அதிலும் நடிகரு, நடிகைகள் நட்சத்திர பேச்சாளர்களா வந்தா, அவங்கள பார்க்குறதுக்கே ஒரு கூட்டம் கூடிடும்.இதனாலயே அரசியல் கட்சிகள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்ல, நடிகர், நடிகையர சேர்க்குறாங்க. இந்நிலையில வர்ற லோக்சபா தேர்தல்ல, வாக்காளர்கள கவரும் வகையில பேசுற மாதிரி அரசியல் கட்சிகள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல தயாரிச்சிட்டு வர்றாங்க.திட்டங்கள் செயல்படுத்த ஆர்வம்!லோக்சபா தேர்தல் வர்ற ஏப்ரல் மாசம் நடக்க இருக்கு. அநேகமாக இந்த மாச இறுதியில இல்லன்ன, அடுத்த மாசம் தொடக்கத்துல, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வர வாய்ப்பு இருக்கு. விதிமுறைகள் வந்த பின்னாடி, எந்த திட்டத்தயும் செயல்படுத்த முடியாது.இதனால வாக்காளர்கள கவர, முடியுற தருவாயில இருக்கும் பணிகளை சீக்கிரம் முடிக்க கர்நாடக அரசும், மத்திய அரசு திட்டங்கள சீக்கிரம் முடிக்க, தாமரை கட்சி எம்.பி.,க்களும் பம்பரமாக சூழன்று வேலை செய்ய ஆரம்பிச்சி இருக்காங்க. தேர்தல்ல வெற்றி முக்கியம் இல்லையா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை