உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீக்ரெட் சிங்காரம்!

சீக்ரெட் சிங்காரம்!

வாட்ச் கொடுக்கும் வேட்பாளரு!கர்நாடகா சட்ட மேலவையில காலியா இருக்குற, பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு வர்ற 17 ல் தேர்தல் நடக்குது. கை, தாமரை கூட்டணி வேட்பாளர்கள் பிரசாரம் பண்ணிட்டு வர்றாங்க. ஒரு கட்சி வேட்பாளரு, ஓட்டு போடும் ஆசிரியர்களுக்கு, விலை உயர்ந்த 'வாட்ச்' பரிசா கொடுத்துட்டு வர்றாராம். நல்ல காரியம் செய்யுறதுக்கு முன்னாடி நேரம் பார்க்குறோம். இதனால வாட்ச் பரிசு கொடுக்குறேன்னு, ஆசிரியர்கள் கிட்ட சொல்லுறாராம். இத பார்த்த மற்றொரு கட்சி காரங்க, உங்க நல்ல நேரமும் கெட்ட நேரமா மாற போகுதுன்னு கிண்டல் பண்றாங்க.கோபத்தை துாண்டும் குமரண்ணர்!புல்லுக்கட்டு கட்சிக்கு வடமாவட்டத்துல, ஒரே ஒரு எம்.எல்.ஏ., தான் இருக்காரு. அவரோட அப்பா சமீபத்துல காலமானாரு. இறந்து போனவருக்கும், தொட்டகவுடர் குடும்பத்துக்கும், நீண்ட கால பந்தம் இருக்கு. ஆனா இறுதி சடங்குல, குமரண்ணரு பங்கேற்கல. தாமரை கட்சிக்காரங்க நடத்துன போராட்டத்துல கலந்து கிட்டாரு. இதனால குமரண்ணர் மேல, எம்.எல்.ஏ., அதிருப்தியில இருக்காரு. ஏற்கனவே தாமரை கட்சி கூட, கூட்டணி சேர்ந்ததற்கு அந்த எம்.எல்.ஏ., எதிர்ப்பு தெரிவிச்சவரு. அவரோட கோபத்த துாண்டுற வகையில, குமரண்ணர் தொடர்ந்து செயல்பட்டுட்டு வர்றாரு.அமைதியான முன்னாள்!தாமரை கட்சியில யோகம் பெயரு கொண்ட, முன்னாள் அமைச்சரு ஒருத்தரு இருக்காரு. இவரும், குமரண்ணரும் ஒரு காலத்துல அரசியல் எதிரிகளா இருந்தவங்க. கூட்டணி வைச்சதும், குமரண்ணர்கிட்ட, முன்னாள் அமைச்சரு நெருக்கமானரு. பெங்களூரு ரூரல் 'சீட்' கேட்டு அடி போட்டாறாரு. முதல்ல வாங்கி தரேன்னு சொன்னவரு, அப்புறம் கைய விரிச்சிட்டாரு. இதனால ஏமாந்து போன, யோகமானவரு இருக்குற இடம் தெரியாம, அமைதியா இருக்குறாரு. தாமரை கட்சி மாநில தலைவர் குடும்பத்தயும், முன்னாள் அமைச்சரு பகைச்சி கிட்டாரு. இதனால அவர அரசியல் வாழக்கை கேள்விகுறி ஆகி இருக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை