உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் சட்ட அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை

அரசியல் சட்ட அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை

புதுடில்லி, மதச்சார்பின்மை என்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.நாடு சுதந்திரம் பெற்று, 1950ல் குடியரசாக மாறியது. அப்போது இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை, 1949, நவ., 26ல் இயற்றப்பட்டது. இதுவே, அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையாகும்.காங்கிரசின் இந்திரா பிரதமராக இருந்தபோது 1976ல், இந்த முகவுரை திருத்தப்பட்டது. முகவுரையில், 'இறையாண்மை, ஜனநாயக, குடியரசு நாடு' என்ற வார்த்தைகளுக்கு இடையே, 'சோஷலிஸ்ட்' எனப்படும் சமூகவுடைமை மற்றும் 'செக்யூலர்' எனப்படும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.இதன்படி, 'நாம், இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை, சமூகத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசாக கட்டமைத்திட' என, துவங்கும் வகையில் முகவுரை மாற்றப்பட்டது. மேலும், இது, 1949, நவ., 26ல் இருந்து நடைமுறைக்கு வருவதாக சட்டத் திருத்தம் கூறுகிறது.இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், சமூகவுடைமை, மதச்சார்பின்மை வார்த்தைகளை நீக்கக் கோரியும், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த வழக்குகள், நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, சஞ்சய் குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டதாவது:அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை, 1949ல் ஏற்கப்பட்டுள்ளது. அதில் திருத்தம் செய்ய முடியாது. ஆனால், 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் வாயிலாக, இதில் சில வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன; அது செல்லாது. அவ்வாறு செல்லும் என்றால், அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தந்துவிடும்.மேலும், முன்தேதியிட்டு, சட்டத் திருத்தத்தை கொண்டு வரவும் முடியாது. முகவுரையை எழுதியபோது, சோஷலிசம் என்ற வார்த்தையை சேர்த்தால், மக்களின் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதாலேயே அதை அம்பேத்கர் சேர்க்கவில்லை.அதனால், 42வது சட்டத் திருத்தம் செல்லாது என்று அறிவித்து, சோஷலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கி, 1949ல் நிறைவேற்றப்பட்ட முகவுரையைத் தொடர உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.இதைத் தொடர்ந்து அமர்வு உத்தரவிட்டதாவது: அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை என்பதை இந்த நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது.சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்ட வார்த்தைகள் அரசியலமைப்பு சட்ட முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை, மதச்சார்பின்மை என்பதையே குறிப்பிடுகின்றன.அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியாகவே மதச்சார்பின்மை இருந்துள்ளது.அதே நேரத்தில், இந்த முகவுரையை சட்டத் திருத்தம் வாயிலாக திருத்தம் செய்ய முடியுமா. அதுவும் முன்தேதியிட்டு நடைமுறைபடுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.வழக்கின் விசாரணை, நவ., 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Madhavan
அக் 22, 2024 09:13

"அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை என்பதை இந்த நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது..." என்றால் எமெர்ஜென்ஸியின் போது இடைச் செருகலாக முகவுரையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் பல்வேறு வழக்குகளில் மேற்கோளாகக் காட்டித்தான் குறிப்பிடப்பட்டுள்ளனவா? அப்ப்டியென்றால் இந்த சட்ட திருத்தம் செல்லும் என்பதை எப்படி நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது அல்லது ஏற்றுக் கொள்கிறது எனும் கேள்வி எழுகிறதே. "சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்ட வார்த்தைகள் அரசியலமைப்பு சட்ட முகவுரையில் குறிப்பிடப் பட்டுள்ளன. இவை, மதச்சார்பின்மை என்பதையே குறிப்பிடுகின்றன.. "மேலும்" அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியாகவே மதச்சார்பின்மை இருந்துள்ளது..." எனில் சோஷலிசம், செக்யூலர் எனும் வார்த்தையை முகவுரையில் அதுவும் முன் தேதியிட்டபடியே எமெர்ஜென்ஸியில் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி இடைச்செருகல் செய்ய வேண்டிய அவசரமோ அவசியமோ இல்லையே.


Dharmavaan
அக் 22, 2024 08:02

இது ள்கை முடிவு நீதி மன்றம் இதில் தலையிட முடியாது பாராளுமன்றம் முடிவு செய்ய வேண்டும் .கோர்ட் வரம்பு மீறுகிறது மோடி துணிந்து இதை நிராகரிக்க வேண்டும் அப்படியானால் மினாரிட்டி சலுகைகள் முழுதும் நீக்கப்பட வேண்டும்


Sathyanarayanan Sathyasekaren
அக் 22, 2024 03:52

நீதிமன்றம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் மற்றொரு சட்டத்திருத்தம் கொண்டுவந்து அந்த சோசலிசம், மதசார்பற்ற என்ற வார்த்தைகளை நீக்கவேண்டும். செய்வார்களா?


Sathyanarayanan Sathyasekaren
அக் 22, 2024 03:51

கான் ஸ்கேம் காங்கிரஸும், போலி காந்தியும் எப்பேர்ப்பட்ட அநியாயத்தை , ஹிந்துக்களை நாடு இல்லாத அனாதை ஆகிவிட்டார்கள். சொரணை இல்லாத ஹிந்துக்கள் இது புரியாமல் இன்னும் அவர்களை நம்பி வோட்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். திருத்தம் 1976 இல் செய்யப்பட்டதாம், ஆனால் 1949 இல் இருந்து அமலில் இருந்தது என்று சொல்வார்களாம், எப்பேர்பட்ட பொய் இது.


புதிய வீடியோ