உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல்கள் 31 பேர் சுட்டுக் கொலை: படைவீரர்கள் 2 பேர் வீரமரணம்

நக்சல்கள் 31 பேர் சுட்டுக் கொலை: படைவீரர்கள் 2 பேர் வீரமரணம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சல்களுடன் நடந்த மோதலில் 2 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். முன்னதாக, 31 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p35799on&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிஜாப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி தேசிய பூங்காவில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சண்டை மூண்டது.இதில் 31 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.முன்னதாக, கடந்த வாரம் இம்மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.வீரமரணம்இந்த மோதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sudha
பிப் 09, 2025 18:46

ட்ரோன் உதவியுடன் இவர்களை வளைத்து பிடித்தால் இனி சந்தோஷப்படலாம் . இன்னும் எத்தனை காலம்தான் மனித வேட்டை, பழிக்கு பழி?


புதிய வீடியோ