உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சருடன் செல்பி : காங்கிரசை மீண்டும் கடுப்பாக்கிய சசிதரூர்

மத்திய அமைச்சருடன் செல்பி : காங்கிரசை மீண்டும் கடுப்பாக்கிய சசிதரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: தொடர்ந்து கட்சி மேலிடத்தை கடுப்பாக்கி வரும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இன்று(25.02.2025) மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றி காங்கிரசை மேலும் கடுப்பேற்றியுள்ளார்.கேரளாவில், திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் இருந்து நான்கு முறை தொடர்ந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள, காங்கிரசை சேர்ந்த சசிதரூர் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். ஐ.நா., சபையில் உயர் பதவி வகித்தவர் என பன்முகம் கொண்டவர்.சமீபத்தில் அமெரிக்காவில் பிரதமர் மோடி - டெனால்டு டிரம்ப் சந்திப்பை பாராட்டி அறிக்கை வெளியிட்டது. இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல்வர் பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் புகழ்ந்து தள்ளியது , என இவரது செயல்கள் காங்கிரஸ் மேலிடத்தை கடுப்பாக்கியுள்ளது. இதற்கெல்லாம் உரிய விளக்கத்தை அளித்து வந்தார். காங்கிரசுக்கு நான் தேவை என்றால் கட்சியில் இருக்கிறேன். நான் உங்களுக்கு தேவை இல்லை என்றால் புத்தகங்கள், சொற்பொழிவுகள், உலகம் முழுதும் நிகழ்ச்சிகள் என எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றார்.இந்நிலையில் இன்று பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனாதன் ரெய்னால்டு, பா.ஜ., மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோருடன் செல்பி எடுத்து அதனை தனது ‛‛எக்ஸ் ''வலைதளத்தில் பதிவேற்றினார் சசிதரூர்.இவரது செயல் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியதால், சசிதரூர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காங்., மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
பிப் 26, 2025 06:33

மீண்டும் மீண்டும் கடுப்பேத்துறார் மை லார்டு..


naranam
பிப் 26, 2025 03:56

மத்திய அமைச்சர் பெயரை பியூஷ் கோயல் என்று திருத்தவும். ஷ் ம் தமிழ் எழுத்து தான்.


Rajan A
பிப் 25, 2025 21:47

ரைட்ல இண்டிகேட்டர் போட்டு, லெஃப்ட்ல கை காட்டி நேர போற மாதிரி பண்ணினால் தான் இவங்க கவனிப்பாங்க


Karthik
பிப் 25, 2025 21:40

ஒரு selfie எடுப்பதில் தவறு என்ன இருக்கிறது?காங்கிரஸ் போல் ஒரு கேவலமான அரசியல் கட்சி இருக்க முடியாது.மக்கள் பணி செய்ய தேர்வானவர்கள் எப்பொழுதும் வெறுப்புடன் சுற்றிக்கொண்டு வளர்ச்சிப்பணிகளை தடுத்துக் கொண்டு இருப்பது நல்லது இல்லை.


Bye Pass
பிப் 25, 2025 21:04

கங்கனா கண்ணில் படவில்லை போல இருக்கே ..


Ramesh Sargam
பிப் 25, 2025 20:21

ஆடு ஒன்று காங்கிரஸ் என்கிற ஆட்டு மந்தையில் இருந்து தப்பிக்க பார்க்கிறது. அடுத்து எந்த மந்தையோ...?


மால
பிப் 25, 2025 20:08

வேலி தாண்ட ரெடியாகிட்டார்


முருகன்
பிப் 25, 2025 19:01

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி விடுவதில் வல்லவர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை