உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி! முதலீட்டாளர்களின் ரூ.8.8 லட்சம் கோடி இழப்பு

பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி! முதலீட்டாளர்களின் ரூ.8.8 லட்சம் கோடி இழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி எதிரொலியாக முதலீட்டாளர்களுக்கு ரூ.8.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப்.28) பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 74.201.77 புள்ளிகளில் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கியது முதலே குறியீட்டு எண்கள் வீழ்ச்சியை சந்தித்தன. தொடர்ந்து இறங்கிய சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் 73.192 புள்ளிகளில் முடிந்தது. அதே நேரத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 418 புள்ளிகள் குறைந்து முடிவில் 22,126 ஆக வீழ்ச்சி கண்டது. இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரும்பாலான வர்த்தகத் துறைகள் கடும் இழப்பை சந்தித்துள்ளன. டெலிகாம், ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளின் பங்குகள் கிட்டத்தட்ட 4 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தின.இந்திய பங்குச்சந்தையின் இந்த வீழ்ச்சியால் மொத்தம், 8.8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் மாற்றம், அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய அறிவிப்புகள், பொருளாதார கொள்கைகள் ஆகியவையே பங்குச்சந்தையில் இன்றைய வீழ்ச்சிக்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்பாவி
மார் 01, 2025 08:00

ஜி.டி.இ வளர்ச்சி 9 பர்சண்ட்டிலிருந்து 6.2 சதவீதத்துக்கு அபார வளர்ச்சி.


Raja Guru
மார் 01, 2025 06:30

இது மோசடி மத்திய அரசின் தோல்வி


V.Mohan
பிப் 28, 2025 23:25

முதலீட்டாளர்களுக்கு ஐயா பங்குச் சந்தை ஒருவிதமான சூது வியாபாரம் போன்றது. அதன் போக்கிற்கு சம்பந்தமற்ற பொருளாதார குறியீடுகளை வைத்துக்கொண்டு ஏறலாம் இறங்கலாம். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை கணக்கில் வைத்து ஒண்ணும் நாடுகளின் பொருளாதாரம் மதிப்பிடப்படுவதில்லை. அதனால் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் என போடாதீர். பங்குவரத்தகம் செய்பவர்கள் தெரிந்தே தான் முதலீடு செய்வதால் லாப நஷ்டம் பார்ப்பது தவறுல


Rasheel
பிப் 28, 2025 20:08

பங்கு சந்தையின் சரிவு நிரந்தரமல்ல. வெளி நாட்டு பங்குதாரர்கள் இந்தியாவில் பங்குகளில் லாபத்தை எடுத்து அமெரிக்கா Bond ல் அதிக வட்டிக்காக முதலீடு செய்கிறார்கள். இதோடு டிரம்ப் in கூச்சல் வேற? இன்னும் 6 மாதங்களில் பங்கு சந்தை அடுத்த உயரிய நிலைக்கு செல்லும். எனவே முதலீடு செய்வோர் நல்ல லாபகரமான, ஈவு தொகை வழங்கும், 1000 கோடிக்கு மேல் விற்று முதல் உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்யுங்கள். உங்கள் பணம் வீண் போகாது.


கோபாலன்
பிப் 28, 2025 19:06

இது ஒன்றும் இல்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்கும் திராவிட மாடல் செய்தி. நேற்று வாங்கிக் இன்று விற்றவர் நட்டம் அடைந்து இருப்பார்கள். அது சில கோடிகள் இருக்கலாம். உங்கள் தவறான புரிதல் ஏற்படுத்துகிறது. பங்கு சந்தை குறியீட்டு எண் எவ்வளவு குறைந்தது என்றோ அல்லது எத்தனை சதவீதம் குறைந்தது என்று குறிப்பிடுவது தான் சரி.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
பிப் 28, 2025 18:47

எவன்டா சொன்னான் வீழ்ச்சின்னு , இறங்குதுன்னா அது யாரோ விக்கிறாங்க யாரோ வாங்குறாங்க , எனக்கு அதானி போர்ட்ஸ் 480 கு வாங்கினேன் 1500 கு போனது குதிச்சேன் ,இப்போ லாபம் கம்மி , வரும் பொறுப்பேன் , குவாண்ட் ஆக்டிவ் fund 2013 ல 48 ரூவாய்க்கு வாங்கினேன் இப்போ, பொறுமை இல்லைனா மார்க்கெட்ல வராதே


பாபு
பிப் 28, 2025 18:28

நல்லாப் போச்சுன்னா பிரதமரின் ராஜ தந்திரம், நிதியமைச்சரின் நூறாண்டு பட்ஜெட், ருசர்வ் வங்கி கெவுனரின் திறமைன்னு மெடல் குத்திப்பாங்க. விழுந்திச்சுன்னா ட்ரம்ப், நேருன்னு காரணம் கண்டுபிடிப்பாய்ங்க.


Barakat Ali
பிப் 28, 2025 18:59

அப்பாவி, இன்னும் இது போல எத்தனை ஐ டி வெச்சிருக்க ????


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 28, 2025 19:10

இருநூறு - பாத்து = நூத்தி தொண்ணுறுதான், கதறல் பத்தவில்லை


R S BALA
பிப் 28, 2025 17:45

அள்ளியும் கொடுக்கும் அதல பாதாளத்திலும் தள்ளிவிடும் அதுதான் பங்குச்சந்தை, சந்தைப்பற்றிய அறிவு +அளவுகடந்த பொறுமை + உரிய காலம் வரை காத்திருத்தல் +அதிர்ஷடம் இவையெல்லாம் ஒருவருக்கு இருந்தால் பங்குசந்தையில் நீடிக்கலாம் இல்லையென்றால் பிம்பிளிக்கி பிலாபித்தான்.


Barakat Ali
பிப் 28, 2025 18:59

முழு உண்மை ....... சுயமாக முயற்சி செய்து நன்கு கற்கவேண்டும் ..... சந்தை நிபுணர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு அதன்படி செய்து கொண்டிருக்கக் கூடாது .... நம்பிக்கை வந்த பிறகு சிறிய அளவில் முதலீடு செய்து பார்க்கலாம் ....


என்றும் இந்தியன்
பிப் 28, 2025 17:16

ஒரு பக்கம் பார்த்தால் ஓகே இன்னொரு பக்கம் வேடிக்கையாக உள்ளது. எவ்வளவு நாம் invest பண்ணினோமோ அதில் வந்த லாபம் குறைந்தது இது தான் உண்மையான வார்த்தை அதைத்தான் வீழ்ச்சி என்று பொருள் கொள்க. நான் invest செய்ததில் எனக்கு வந்த லாபம் மிகவும் குறைந்துள்ளது


Rakesh D Rakesh
பிப் 28, 2025 16:59

SEBI அங்கிகாரம் அல்லாத அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல பிஜேபி அறிவிலிகள், நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், சந்தைகளில் தைரியமாக முதலீடு செய்யுங்கள் என்று மக்களுக்கு பொது வெளியில் அறிவுறுத்தினார்கள். அவர்களின் பேச்சை கேட்டு எதனை பேர் வாழ்க்கை இழந்தார்களோ?? இவ்வாறு அறிவுறுத்திய இவர்களின் மீது செபி எந்த ஒரு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.


Youvaraj V
பிப் 28, 2025 17:48

முட்டாள்தனமான கருத்துக்களை பதிவிடாதீர்.


Barakat Ali
பிப் 28, 2025 18:55

ராகேஷ் .... முதலில் பங்குச்சந்தை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் ....


சமீபத்திய செய்தி