உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=um8rx7oh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஓராண்டாக சிறையில் இருக்கிறார். இதுவரை அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. அவரது ஜாமின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றைய (ஆக.,12) விசாரணையின்போது, 'செந்தில் பாலாஜி விவகாரத்தில் விசாரணை எப்போது நிறைவடையும்?' என நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, 'வழக்கு விசாரணை தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம். செந்தில் பாலாஜியுடன், தமிழக அரசு நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளுக்கு ஆபத்து' என வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், '15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு, டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வழக்கின் தீர்ப்பு பொருந்தும். அவர் முன்னாள் அமைச்சர், 5 முறை எம்எல்ஏ.,வாக இருந்துள்ளார். எங்கும் தப்பிச் செல்லமாட்டார். எனவே, ஜாமின் வழங்க வேண்டும்' என வாதிட்டார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

vsundar1804@yahoo.com
ஆக 13, 2024 08:52

நாடு நாசமாக தான் போகும். ஆதானால தான் இந்த தடவை மைனாரிட்டி கூட்டணி ஆட்சி. கூடிய சீக்கிரம் கவிழ்ந்திடும்


Ramaswamy Vasudevan Srinivasan
ஆக 13, 2024 03:08

ஊழல் பேர்வழிகளை விடுவிக்கவே உச்சநீதிமன்றம் உள்ளது. ராகுல் சிசோடியாகேஜ்ரிவால் பொன்முடி இன்னும் எவ்வளவோ இந்த நாட்டை காப்பாற்ற ஆயிரம் மோடி அண்ணாமலை வந்தாலும் நடக்காது


Ramaswamy Vasudevan Srinivasan
ஆக 13, 2024 03:08

ஊழல் பேர்வழிகளை விடுவிக்கவே உச்சநீதிமன்றம் உள்ளது. ராகுல் சிசோடியாகேஜ்ரிவால் பொன்முடி இன்னும் எவ்வளவோ இந்த நாட்டை காப்பாற்ற ஆயிரம் மோடி அண்ணாமலை வந்தாலும் நடக்காது


Natarajan Ramanathan
ஆக 13, 2024 02:05

அடுத்த விசாரணை இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து வைத்தால் போதும்.


Iniyan
ஆக 12, 2024 21:08

ஊழல் பேர்வழிகள் சுலபமாக விடுதலை ஆவார்கள். நீதி மன்றங்கள் திருடர்களின் பாதுகாப்பான புகலிடம்


Ramesh Sargam
ஆக 12, 2024 20:58

செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு முன்பு அவருக்கு நெருக்கமாக இருந்த மற்ற அத்தனை திமுக தலைவர்களும், முதல்வர் உட்பட இன்று கப்சிப்... ஏன்? காரணம் தெரிந்தவர்கள் கூறலாம்.


Kasimani Baskaran
ஆக 12, 2024 20:43

தம்பியை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தால் உடனே ஜாமீன் கிடைக்கும். இல்லை என்றால் அடுத்து நொடியில் உள்ளே தூக்க ஆட்கள் 24/7 ரெடி.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 12, 2024 22:59

கேவலமா இல்லை ஸ்காட்லாந்து யார்ட போலீஸ் வைத்துள்ள கேடியின் ED க்கு


N.Purushothaman
ஆக 12, 2024 19:27

தம்பி இன்னும் நீதிமன்றத்துக்கு வரல ....


தாமரை மலர்கிறது
ஆக 12, 2024 18:53

செந்தில் பாலாஜிக்கு சொல்லாமல் கொடுக்கப்பட்ட தீர்ப்பு காலவரையற்ற சிறை தண்டனை தான். தொட்டுப்பார், கை வைத்து பார் என்று கர்ஜித்த செந்தில் பாலாஜி கதறி கதறி ஒப்பாரி வைக்கிறார். மற்ற திமுக அமைச்சர்களுக்கு செந்தில் பாலாஜியின் கதை ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. பிஜேபி ஆட்சி மத்தியில் இருக்கும்வரை செந்தில் வெளியே வரவாய்ப்பே இல்லை.


manokaransubbia coimbatore
ஆக 12, 2024 18:52

யுவர் ஹனர் அவர் நிரபாரதி எனவே உடனே விடுதலை. தம்பி இன்னும் காணோம் தேடி கொண்டு இருக்கிறோம் யுவர் ஹானோர். இது பற்றி ஒன்றும் சொல்லாதீர்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி