உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜிக்கு எதிரான கருத்து: நீக்குவதற்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு

செந்தில் பாலாஜிக்கு எதிரான கருத்து: நீக்குவதற்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசு வேலைக்காக லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கருத்துக்களை நீக்குவதற்கு சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.செந்தில் பாலாஜி மீதான இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறியதாவது;2022ம் ஆண்டு தீர்ப்பில் நாங்கள் எதையும் நீக்க மாட்டோம். உத்தரவில் ஒரு வார்த்தையையும் தொட மாட்டோம். எந்த தீர்ப்பையும் நாங்கள் தொடவோ அல்லது மாற்றவோ போவதில்லை. இருப்பினும், நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையில் இந்த கருத்துக்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை மட்டுமே தெளிவுபடுத்துவோம். அது குற்றவியல் நீதித்துறையின் அடிப்படைக் கொள்கை. அடிப்படைக் கொள்கைகள் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். செந்தில் பாலாஜிக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நிவாரணம் கோரவில்லை. அதற்கு பதிலாக, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள், வழக்கின் விசாரணையை பாதிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தை கோரினார்.இரண்டு நீதிபதிகளும் ஓய்வு பெற்ற பிறகு, தீர்ப்புகளில் திருத்தம் செய்ய இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு விண்ணப்பங்களை தாக்கல் செய்ததாக பாலாஜியின் நடத்தை குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.வழக்கின் நிலை அறிக்கையில், வழக்கில் இன்னும் 350க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ