உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / படப்பிடிப்பில் ஷாருக் காயம்: சிகிச்சைக்கு அமெரிக்கா விரைந்தார்

படப்பிடிப்பில் ஷாருக் காயம்: சிகிச்சைக்கு அமெரிக்கா விரைந்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்த கிங் படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த ஹிந்தி நடிகர் ஷாருக் கான், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுஉள்ளார். பிரபல ஹிந்தி நடிகரான ஷாருக் கான், கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர்கள் அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். கிங் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கான சண்டை காட்சி, மும்பையில் உள்ள 'கோல்டன் டொபாக்கோ' ஸ்டுடியோவில் நடந்து வந்தது. இதில் பங்கேற்ற ஷாருக் கான் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மும்பையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இருப்பினும், அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. படப்பிடிப்பு தளத்தில் இருந்தோர் கூறுகையில், 'பெரிய அளவில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான சிகிச்சைக்கு ஷாருக், அமெரிக்கா சென்றுள்ளார். ஒரு மாதம் ஓய்வு எடுக்கச் சொல்லி டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்' என தெரிவித்தனர். ஷாருக் கான் காயமடைந்ததை அடுத்து, கிங் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

theruvasagan
ஜூலை 20, 2025 15:37

தரமான அதிக செலவு பிடிக்காத மருத்துவ சிகிச்சை நம் நாட்டில் கிடைக்கிறது என்பதற்காக நிறையபேர் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிற போது கூத்தாடிகளும் அரசியல்வியாதிகளும் இங்கு இருக்கும் மருத்துவ வசதிகளை மதிக்காமல் வெளிநாட்டுக்குப் பறக்கிறார்கள். கடின உழைப்பு இல்லாமல் கோடிகளில் சம்பாதித்த பணம் அவர்களை அப்படி நடக்க வைக்கிறது.


subramanian
ஜூலை 20, 2025 13:33

இந்திய ரசிகர்கள் கொடுத்த பணத்தில் அமெரிக்கா வில் சிகிச்சை


அப்பாவி
ஜூலை 20, 2025 09:39

நடிக்கிறது நாட்டுப் பற்றான ஜவான், சர்தார்னு மாதிரி படங்க. சின்ன சிராய்ப்பு வந்தாலும் அமெரிக்கா போய் பேண்டேஜ் போட்டுப்பாங்க. இவனுக்குதான் ரசிகர்கள் கொட்டிக் குடுப்பாய்ங்க. tide தான் அசல் எஸ்.ஆர்.கே ந்னு சொல்லி கோடிக்கணக்கில் காசு.


SUBBU,MADURAI
ஜூலை 20, 2025 08:04

பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்பது போல இவரது பெயருக்காகவே அமெரிக்க விமான நிலையத்தில் அரை நாள் சோதனைக்காக காத்திருக்க வேண்டுமே பரவால்லையா? ஏற்கனவே இந்த நடிகருக்கு அமெரிக்காவில் அப்படிப் பட்ட முன் அனுபவம் உள்ளது.


V RAMASWAMY
ஜூலை 20, 2025 07:56

நாட்டு நலனுக்கு முன்னேற்றம் தரும் முக்கியமான செய்தி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை