உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: சீனா செல்கிறார் ராஜ்நாத்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: சீனா செல்கிறார் ராஜ்நாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவில் நடைபெற உள்ளது. இந்த அமைப்பில் இந்தியாவும் உறுப்பினர் ஆக உள்ளது. இந்த அமைப்பின் மாநாடு இந்த மாத இறுதியில் சீனாவின் குயிங்டாவ் நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அழைப்பு வந்துள்ளது. இதனை ஏற்று ராஜ்நாத் சீனா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.கல்வானில், இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்கு பிறகு ராஜ்நாத் சிங் சீனா செல்வது இதுவே முதல்முறையாகும். இந்த மோதலுக்கு பிறகு நிலைமையை சரி செய்ய இருநாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V SURESH
ஜூன் 16, 2025 07:00

6 லட்சம் கோடி ரூபாய்க்கு சீனாவுடன் வியாபாரம் நடக்கிறது. அதனை உடனடியாக குறைக்க முடியாது மூலப்பொருட்கள் தேவையை என்ன செய்வது அனுசரித்து தான் செல்லணும்.


சூ சின்
ஜூன் 16, 2025 05:44

புறக்கணிப்புன்னு செய்தி வந்திச்சு. இருந்தாலும் ஒருத்தரை அனுப்பனும்.


Ramesh Sargam
ஜூன் 15, 2025 19:45

சீனாவை நம்பி அங்கு செல்வது சரியா?


சமீபத்திய செய்தி