உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்க அரசின் நல்ல முடிவு; மஹா., அரசும் பின்பற்றணும் என்கிறார் சரத்பவார்

மேற்கு வங்க அரசின் நல்ல முடிவு; மஹா., அரசும் பின்பற்றணும் என்கிறார் சரத்பவார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மஹாராஷ்டிரா அரசும் பின்பற்ற வேண்டும்' என தேசியவாத காங்., (பவார்) கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்தார்.பாலியல் குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், 'அபராஜிதா' மசோதா எனப்படும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மசோதா மேற்கு வங்கத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் சரத்பவார் கூறியதாவது: மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மஹாராஷ்டிரா அரசும் பின்பற்ற வேண்டும். அத்தகைய மசோதாவை எனது கட்சி ஆதரிக்கிறது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், மஹாராஷ்டிராவில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் இருக்காது. இந்த விஷயத்தை நாங்கள் எங்கள் தேர்தல் பிரசாரத்தில் முன்னிலைப்படுத்துவோம். அதை தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிடுவோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=virmy1rg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

குறைந்த அனுபவம்

சமீபத்தில் இடிந்து விழுந்த சிவாஜி மகாராஜின் சிலையை உருவாக்கிய சிற்பிக்கு குறைந்த அனுபவம் மட்டுமே இருந்துள்ளது. அவர் இதற்கு முன் இவ்வளவு பெரிய வேலையைச் செய்ததில்லை. அவருக்கு இவ்வளவு பெரிய வேலையை வழங்குவது ஏற்புடையதல்ல. அந்த சம்பவத்திற்குப் பிறகு, சத்ரபதி சிவாஜி மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் வருத்தம் அடைந்தனர். பலத்த காற்றுதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். இந்த காரணங்கள் நம்பத்தகுந்தவை அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
செப் 04, 2024 16:53

மக்களின் வரிப்பணத்தை சிறுபான்மையினர் , கோட்டா, MUDA என்று செலவு செய்து ஆட்டைய போட்டு நாட்டை கற்பழிக்கும் மக்களுக்கும் இது பொருந்தும் அல்லவே ?


SUBBU,MADURAI
செப் 04, 2024 14:54

தீதி தனது சொந்த மாநிலத்தில் தனக்கு ஏற்பட்ட பெரும் பிரச்சனையை தீர்க்க இந்த மாதிரி நாடகம் ஆடி ஒரு கோமாளி சட்டத்தை இயற்றுகிறாள் ஏன் என்று கேள்வி கேட்க உனக்கு துப்பு இல்லை அது போக மேலும் அவருக்கு ஜால்ரா தட்டுகிறாய் உனக்கு வெட்கமாக இல்லை? ஏற்கனவே நீ செய்த குற்றங்களுக்காக நீதிமன்றம் உனக்கு தண்டனை அளிக்கா விட்டாலும் கடவுள் .... விட்டான் இனிமேலாவது டபுள் கேம் ஆடாமல் அந்த மகாராஷ்டிர மக்களுக்கு உண்மையாக இரு இல்லை என்றால் உன்னுடைய மீதி ....


ஆரூர் ரங்
செப் 04, 2024 14:48

மூன்று முறை ஆட்சியிலிருந்தபோது என்ன செய்தீர்கள்? மமதா போல் நாடகமா?


spr
செப் 04, 2024 14:38

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - இது ஒரு கண் துடைப்பு நாடகம் நிச்சயம். தண்டனையை இவர்கள் தாயே முடியாது "ஜாமீன் என்பது விதி...சிறை என்பது விதிவிலக்கு" என இப்படித் தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் உறுதியாக மரண தண்டனையை வழங்காது என அறிந்தும் இப்படியொரு சட்டமியற்றுவது மக்களை ஏமாற்றும் வேலை. இதைவிட, காவற்துறை, கற்பழிப்புக்கு குற்றங்களில் காவற்துறையே விசாரித்து, "என்கவுண்டர்" செய்யலாம் என்றிருந்தால் அது நடக்கும் ஒரு சில நேரங்களில் அப்பாவி ஒருவர் இறக்கலாம் ஆனால் விதியை நம்பும் நம் மக்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள். குற்றம் செய்பவன் விதியை நம்பாதவன் அதனால் பயப்படுவான் குற்றங்கள் குறையும்