உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு சரத் பவார் திடீர் பாராட்டு

ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு சரத் பவார் திடீர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: “தன் சித்தாந்தத்திற்காக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அதே போல, நாமும் செயல்பட வேண்டும்,” என, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் பிரிவு தலைவர் சரத் பவார் குறிப்பிட்டார்.மஹாராஷ்டிராவின் மும்பையில், தன் கட்சி தொண்டர்களிடையே, சரத் பவார் பேசியதாவது:ஹிந்துத்துவா அமைப்பின் சித்தாந்தத்திற்கு அசைக்க முடியாத விசுவாசத்தை ஆர்.எஸ்.எஸ்., காட்டுகிறது. அதே போல, அந்த அமைப்பின் ஊழியர்களும் கொள்கை தவறாமல் ஒரே பாதையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். நாமும் அவர்களை போல செயல்பட்டு, சத்ரபதி ஷாஹு மகாராஜ், மகாத்மா பூலே, அம்பேத்கர், யஷ்வந்த்ராவ் சவான் ஆகியோரின் சித்தாந்தங்களை பரப்ப வேண்டும். லோக்சபா தேர்தலில் வெற்றிக்கு பின், நாம் மனநிறைவு அடைந்தோம். அதே சமயம், ஆளும் மஹாயுதி கூட்டணியினர், தோல்விக்கான காரணங்களை கண்டறிந்ததால், சட்டசபை தேர்தலில் வென்றனர்.இந்த தேர்தலில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு செய்த பணிகளை எடுத்துரைக்க தவறியதே தோல்விக்கான காரணங்களில் ஒன்று. உள்ளாட்சி தேர்தலில், 50 சதவீதம் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Sundar Pas
ஜன 11, 2025 11:39

கடைசி காலத்திலாவது ஹிந்துக்களுக்கு ஆதரவாக வந்துவிடு...


நிக்கோல்தாம்சன்
ஜன 11, 2025 11:27

இப்படி பிரித்து பேசியே இந்தியாவை வித்துடீங்க , மதத்தை விட்டுவிட்டு நாட்டை நேசிக்க தொடங்குங்க .


kulandai kannan
ஜன 11, 2025 10:51

மராட்டிய கட்டுமரம் ரிடையர் ஆவது அரசியலுக்கு நல்லது.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 11, 2025 10:03

மத தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு. இவருக்கு பொழைக்க வேற வழி தெரியல, பாவம். என்ன கஷ்டமோ, நிர்ப்பந்தமோ...


N Sasikumar Yadhav
ஜன 11, 2025 13:14

போலியா பெயரில் கருத்துப்போடும் நீயிதான் மததீவிரவாதி திரு வைகுண்டுர் அவுர்களே


veera
ஜன 11, 2025 22:43

ஆமாம் வைகுண்டம். திமுக கூட தனியா நிக்க தைரியம் இல்லாம கூட்டணி போட்டு நிக்கிது....மனசே தேத்திக்கோ


AMLA ASOKAN
ஜன 11, 2025 09:13

ஹிந்துத்துவா அமைப்பின் சித்தாந்தமான இந்துராஷ்டிரா கொள்கைக்காக தான் அந்த அமைப்பின் ஊழியர்கள் எப்பொழுதும் பணியாற்றுபவர்கள் . இந்த முறை BJP வெற்றிக்காக அரசியலிலும் தீவிர அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள் . அதை தான் சரத் பவார் பாராட்டினார் . ஆர்.எஸ்.எஸ்., ன் ஹிந்துத்வா கொள்கையை பாராட்டவில்லை . சரத் பவார் அரசியலுக்காக பிஜேபி யுடன் கைகோர்க்கலாம் . அல்லாமல் 75 வருட மதச்சார்மின்பை ரத்ததில் ஊறிப்போன அவர் RSS கொள்கையை ஏற்றுக்கொள்ளவே மாட்டார் .


Mettai* Tamil
ஜன 11, 2025 10:28

75 வருட மதச்சார்பின்மையின் உண்மைத்தன்மை சரத்பவார்க்கு நல்லாவே தெரியும் ..நாடு சுதந்திரம் வாங்கும் முன்பே 1906 ல் முஸ்லீம் லீக் என்று ஒரு மதவாத கட்சி உருவானது ..இதற்கு எதிர்வினையாக தான் RSS 1924 ல் உருவானது .அடுத்து மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டது ...RSS கொள்கையை ஏற்கனவே ஏற்றுக்கொண்டவர்தான் ....


சின்ன சுடலை
ஜன 11, 2025 10:38

அடேங்கப்பா. போடா டுபாக்கூர்.


Barakat Ali
ஜன 11, 2025 08:36

மோடி அல்ல மனிதர் ன்னு எல்லோ டவல் சர்ட்டிபிகேட் கொடுக்கலையா ? அதுபோலத்தான் .....


sankaranarayanan
ஜன 11, 2025 08:35

சீக்கிரமே ஆர் எஸ் எஸ் அமைப்புடனோ அல்லது பிஜேபியுடனோ சேர்ந்து விடுங்கள் எஞ்சியகாலமாவது நிம்மதியாகா வாழலாம்


சின்ன சுடலை
ஜன 11, 2025 08:19

ரொம்ப பழைய போட்டோ போல் தெரிகிறது.


SUBBU,MADURAI
ஜன 11, 2025 08:33

ஆமா வாய் கோணாமல் இருக்கிறது அதனால் இது பழைய புகைப்படம்தான்..


ALWAR
ஜன 11, 2025 07:25

அதன் தலைவர்கள் எந்த ஆசையும் எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை மனதுடன் தொண்டஆற்றுகிறார்கள் சரத்பவார் அப்படியா ?


Kasimani Baskaran
ஜன 11, 2025 07:03

நாடுதான் முக்கியம் - மற்றதெல்லாம் சின்ன விஷயங்கள் என்று சிந்திப்பதுதான் ஆர் எஸ் எஸ்ஸின் பலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை