உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம்: மத்திய அரசு ஒப்புதல்

பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம்: மத்திய அரசு ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு நிலத்தை ஒதுக்கி உள்ளது. இதற்காக அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். இந்திரா அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்தவர். மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இதன் பிறகு ஜனாதிபதியாக இருந்தார். அவர், கடந்த 2020 ஆக., 31ல் காலமானார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரணாப் முகர்ஜி மகள் சர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், ' எனது தந்தை இறந்தபோது, செயற்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கூட காங்கிரஸ் கருதவில்லை. ஜனாதிபதி 4 பேருக்கு இவ்வாறு கூட்டவில்லை என மூத்த தலைவர் ஒருவர் கூறினார். கே.ஆர்.நாராயணன் மறைவை அடுத்து காங்., செயற்குழு கூட்டியதும், இரங்கல் தீர்மானத்தை தயார் செய்ததும் அப்பாதான் என அவரது நாட் குறிப்பு மூலம் பின்னர் தெரிந்து கொண்டது வேதனையாக இருந்தது. மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்பது ஒரு சிறந்த யோசனை. ஜனாதிபதியாக எனது தந்தை இருந்தபோது, மன்மோகன் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க விரும்பினார். ஆனால், இரண்டு காரணங்களில் அது நடக்கவில்லை எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி, ராஜ்காட்டின் ஒரு பகுதியான ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் இந்த நினைவிடம் அமைய உள்ளது.இதற்கு நன்றி தெரிவித்து சர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது தந்தைக்கு நினைவிடம் அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அரசின் முடிவுக்காக பிரதமர் மோடியை சந்தித்து மனதார எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக நாங்கள் கேட்காத போதும், அனுமதி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமரின் எதிர்பாராத இந்த கருணையால் மகிழ்ச்சி ஏற்பட்டது.அரசு மரியாதையை கேட்கக்கூடாது. அரசே வழங்க வேண்டும் என தந்தை அடிக்கடி கூறுவார். அவரின் நினைவைப் போற்றும் வகையில், பிரதமர் மோடி இதைச் செய்ததற்கு நான் மிகவும் நன்றி உள்ளவராக இருக்கிறேன். அவரது மகளாக எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Dharmavaan
ஜன 08, 2025 07:09

இப்படி ரத்த தலைவருக்கெல்லாம் சமாதி நினைவிடம் காட்டிக் கொண்டே போனால் நாட்டில் இடமே போதாது பிறர் வாழ இடமே இருக்காது இன்னும் வரும்காலங்களில் எதனை வருமோ


Dharmavaan
ஜன 08, 2025 07:06

மோடியின் பரந்த மனம் கட்சி சார்பில்லாமல்


Kasimani Baskaran
ஜன 08, 2025 06:44

அரசியலைக்கடந்த நல்ல மனிதர். அவருக்கு நினைவிடம் அமைப்பதில் மிக்க மகிழ்ச்சி.


AMLA ASOKAN
ஜன 07, 2025 21:02

இப்பொழுது காங்கிரஸ் மன்மோஹன்சிங்குக்கு நினைவிடம் அமைக்கப் போவதால் 2020ல் இறந்த பிரணாப் முகர்ஜிக்கு பிஜேபி சார்பில் இப்பொழுது நினைவிடம் . சபாஷ் சரியான போட்டா போட்டி .


Ramesh Sargam
ஜன 07, 2025 20:32

அடுத்து சமீபத்தில் மறைந்த முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கா ???


Oru Indiyan
ஜன 07, 2025 20:17

ஏன் திராவிடிய கும்பல்... பிரணாப் அவர்களுக்கு நினைவிடம் கேட்கவில்லை.


Indian
ஜன 07, 2025 19:54

நாடு முழுக்க நினைவிடம் கட்டுங்க . வேற என்ன வேலை


Arunkumar,Ramnad
ஜன 07, 2025 20:58

இதைப் போய் உம்முடைய திராவிட மாடல் அரசிடம் சொல் கொத்தடிமையே...


த நா பற்றாளர், kk nagar
ஜன 07, 2025 22:58

கொத்தடிமைகள் அரசியல் செய்து மரினாவில் மட்டுமே இடம் வேண்டும் என வெட்டி அடம் பிடித்து, உய‌ர் நீ‌திம‌ன்ற‌ம் விதித்த தடைகளை மீறி கட்டியது எதில் சேரும்?


முக்கிய வீடியோ