UPDATED : நவ 09, 2025 10:32 PM | ADDED : நவ 09, 2025 10:29 PM
புதுடில்லி: பாஜ மூத்த தலைவர் அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை புகழ்ந்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் அறிக்கை வெளியிட்டார். இது காங்கிரசாரை கோபம் அடைய வைத்தது. அவர்கள் சசிதரூரை விமர்சித்து வருகின்றனர். பாஜ மூத்த தலைவர் அத்வானி நேற்று 98வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையடுத்து பிரதமர் மோடி, அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜ மூத்த தலைவர்களும் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர். பலர் சமூக வலைதளங்கள் மூலமும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dvsresmo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், காங்கிரசின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்பியுமான சசி தரூர் ஒருவர். அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியதாவது: 98 வது பிறந்த நாள் கொண்டாடும் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மக்களுக்கு சேவை செய்ய அவர் காட்டிய அர்ப்பணிப்பு, கண்ணியம் மற்றும் நவீன இந்தியாவுக்கான பாதையை வடிவமைப்பதில் அவரது பங்கு அழியாதவை.சேவை வாழ்க்கைக்கு முன்மாதிரியான ஒரு உண்மையான அரசியல்வாதி எனப் புகழ்ந்து பாராட்டியிருந்தார்.ஏற்கனவே பல விஷயங்களில் சசி தரூர் மீது கோபத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு இது மேலும் அதிருப்தியையே ஏற்படுத்தியது. பாஜ மூத்த தலைவரை காங்கிரஸ் எம்பி எப்படி புகழலாம் என்ற அதிருப்தியில் சசி தரூரை வசைபாடத் துவங்கினர்.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் வக்கீலான சஞ்சய் ஹெக்டே, சசி தரூரை நேரடியாக விமர்சித்தார். சசிதரூர் வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்து செய்தியிலேயே, தனது அதிருப்தியை சஞ்சய் ஹெக்டே பதிவு செய்து இருந்தார். இதற்கு பதிலளித்த சசி தரூர், முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா செய்த தவறுகளை சுட்டிக்காட்டி தனது அத்வானியை புகழ்ந்ததை நியாயப்படுத்தினார். சசி தரூர் வெளியிட்ட பதிலில் கூறியுள்ளதாவது: எவ்வளவு தீவிரமான காரியம் என்றாலும் அந்த விஷயத்தை வைத்துக்கொண்டு அத்வானியின் நீண்ட நெடிய சேவையை ஒரே ஒரு அத்தியாயத்தை வைத்து குறைத்து மதிப்பிடக்கூடாது. நேருவின் வாழ்க்கையை சீன விவகாரத்தால் ஏற்பட்ட பின்னடைவை வைத்து வரையறுக்க முடியாதோ, இந்திராவின் வாழ்க்கையை எமர்ஜென்சி காலத்தை வைத்து மட்டும் வரையறுக்க முடியாதோ, அதே நியாயம் அத்வானிக்கும் காட்ட வேண்டும். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.இதனையடுத்து, சசி தரூர் கூறியது அவரின் சொந்தக் கருத்து எனக்கூறி வருகின்றனர்.