உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவசேனா நிர்வாகியை சுட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ.,:  போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய கொடூரம்

சிவசேனா நிர்வாகியை சுட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ.,:  போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தானே: மஹாராஷ்டிராவில், கூட்டணியில் உள்ள சிவசேனா நிர்வாகியை போலீசார் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ., கண்பத் கெய்க்வாட் நேற்று கைது செய்யப்பட்டார். 'பாலிவுட்' சினிமா காட்சி போல போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அரங்கேறிய இந்த சம்பவம், சிவசேனா - பா.ஜ., தலைவர்கள் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கல்யாண் தொகுதி எம்.எல்.ஏ.,வாக பா.ஜ.,வைச் சேர்ந்த கண்பத் கெய்க்வாட் என்பவர் உள்ளார். இவருக்கும், ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியின் கல்யாண் தொகுதி பொறுப்பாளரான மகேஷ் கெய்க்வாட் என்பவருக்கும் நிலம் வாங்குதல் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு

கண்பத் கெய்க்வாடுக்கு சொந்தமான நிலத்தை மகேஷ் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக புகார் அளிக்க உல்லாஸ் நகரில் உள்ள ஹில்லைன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கண்பத்தின் மகன் நேற்று முன்தினம் இரவு சென்றார். எதிர்தரப்பைச் சேர்ந்த மகேஷ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களும் அங்கு சென்றனர். தகவலறிந்து பா.ஜ., - எம்.எல்.ஏ-., கண்பத் கெய்க்வாடும் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். இருவருக்கும் இடையிலான பிரச்னை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரித்து கொண்டிருந்த போது, திடீரென ஆவேசமடைந்த கண்பத் கெய்வாட், தன் இடுப்பில் இருந்து துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். ஐந்திற்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பாய்ந்ததில், மகேஷ் கெய்க்வாடுக்கு தலை மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த சிவசேனா எம்.எல்.ஏ., ராகுல் பாட்டீலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இதையடுத்து, இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் போலீசாரின் முன்னிலையிலேயே மோதிக் கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமானது. உடனடியாக படுகாயமடைந்த மகேஷ் மற்றும் ராகுல் ஆகியோர் கல்யாணில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மகேஷ் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய கண்பத் மற்றும் அவருடன் இருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

குற்றச்சாட்டு

அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதான மூவரையும் வரும் 14ம் தேதி வரை காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கைதுக்கு முன்னதாக துப்பாக்கிச் சூடு குறித்து கண்பத் கெய்க்வாட் கூறுகையில், ''போலீஸ் ஸ்டேஷனில் என் மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் நான் துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட்டேன். ஒரு தந்தையாக நான் எந்த தவறும் செய்யவில்லை. ''மஹாராஷ்டிராவில் குற்றவாளிகள் ராஜ்ஜியத்தை நிறுவ முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முயல்கிறார்,'' என குற்றஞ்சாட்டினார். சிவசேனா நிர்வாகிகளும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார். கூட்டணி கட்சி நிர்வாகியை பா.ஜ., - எம்.எல்.ஏ-., துப்பாக்கியால் சுட்ட சம்பவம் மஹாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ஆரூர் ரங்
பிப் 04, 2024 17:23

எம்ஜியாரை சுட்ட MRராதா பெரியாரின் தொண்டர்.


Velan Iyengaar
பிப் 04, 2024 16:33

இந்த தளம் இதே போல.... திருமணம் செய்ய முயற்சித்து காசு அடிக்க முயற்சித்து.... கேடுகெட்ட ஒரு விஷயத்த நிறுவ பாக்குற அசிங்கம்.. .


Velan Iyengaar
பிப் 04, 2024 16:47

இது தான் மானம் ஈனம் இல்லாம செஞ்சிகிட்டு வந்து இருக்காங்க


Citizen_India
பிப் 04, 2024 16:02

நான் MLA வா இதை செய்யவில்லை ஒரு அப்பா வா தான் இதை செய்தேன், ஹி ஹி ஹி. நல்ல பாருங்க பழைய காங்கிரஸ் ஆளா இருப்பான். தி முக ஒழிய கண்மூடி தனமா கூட பிஜேபி யா தமிழ் நாட்டில ஆதரிக்கலாம்.


Prem
பிப் 04, 2024 13:02

இதுக்கு தான் BJP வரக்கூடாது என்று சொல்வது


கனோஜ் ஆங்ரே
பிப் 04, 2024 11:58

உங்க கட்சிக்காரனுங்க எல்லாருமே இப்படித்தான், ஒரு காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால சுடுறான்னா.. அந்த எம்எல்ஏ இருக்குற கட்சி எப்படி யோக்கியமா இருக்க முடியும்.


Apposthalan samlin
பிப் 04, 2024 11:06

பிஜேபி வந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு கேட்டு விட்டது


Rajathi Rajan
பிப் 04, 2024 10:43

ஒரு பானை சொத்துக்கு ஒரு சோறு பதம் ... பிஜேபி லட்சணம் இது தான்,,,,


beindian
பிப் 04, 2024 10:39

இந்த கலாச்சாரத்தைதான் இங்கே கொண்டு வர இந்த சங்கீகள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்


beindian
பிப் 04, 2024 10:36

இந்த கும்பலுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்


தத்வமசி
பிப் 04, 2024 09:15

மந்திரியாக இருப்பவரு பேசினால் தனிப்பட்ட கருத்து என்று எழுதும் தமிழக ஊடகங்கள், பிஜேபி கட்சிக்காரர் தனிப்பட்ட விரோதத்தால் பிரச்சினை செய்யும் போது கட்சியின் பெயர் எங்கிருந்து வந்தது ?


தமிழ்
பிப் 04, 2024 11:59

அதையேதாண் நாங்களும் சொல்றோம். இதே தமிழ்நாட்ல நடந்திருந்தா ஒட்டுமொத்த பக்கோடாஸ்களும் திமுக வையே, அதன் ஒட்டுமொத்த mla க்களையே திட்டி தீர்த்திருப்பீர்கள் அல்லவா.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை