உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர் அல்ல ஸ்டாலின் கருத்துக்கு சிவசேனா பதில்

நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர் அல்ல ஸ்டாலின் கருத்துக்கு சிவசேனா பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: “மஹாராஷ்டிராவில், துவக்கப்பள்ளிகளில் ஹிந்தி திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழகத்தைப் போல் ஹிந்தி மொழியையே எதிர்க்கவில்லை,” என, உத்தவ் சிவசேனா கட்சி மூத்த எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவில், மும்மொழி கொள்கையின் கீழ், 1 - 5ம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம் என, அறிவிக்கப்பட்டது.

எதிர்ப்பு

இதற்கு மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியது. 19 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர், இந்த விவகாரத்தில் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்தனர்.பல்வேறு தரப்பினரின் பலத்த எதிர்ப்பை தொடர்ந்து, மும்மொழி கொள்கை உத்தரவை மாநில அரசு திரும்ப பெற்றது. இதைக் கொண்டாடும் வகையில், மும்பையில் நேற்று முன்தினம், உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து மாபெரும் கூட்டத்தை நடத்தினர். 19 ஆண்டுகளுக்கு பின், இருவரும் ஒரே மேடையில் தோன்றியதை பார்த்து, அவர்களின் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'ஹிந்தி திணிப்பை எதிர்த்து, தி.மு.க.,வும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்தும் மொழி உரிமைப்போர், மாநில எல்லைகளைக் கடந்து, மஹாராஷ்டிராவில் சூறாவளியாக சுழன்றடிக்கிறது. 'மக்கள் எழுச்சிக்கு அஞ்சி, பா.ஜ., இரண்டாவது முறையாக பின்வாங்கியுள்ளது' என, குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத், மும்பையில் நேற்று கூறியதாவது:துவக்கப் பள்ளிகளில் ஹிந்தி திணிப்பதை மட்டுமே உத்தவ் - ராஜ் தாக்கரே எதிர்க்கின்றனர். அவர்கள் ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை. ஹிந்தி தொடர்பான தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கும், எங்களின் நிலைப்பாட்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

போராட்டம்

தமிழகத்தில் ஹிந்தி பேச மாட்டார்கள்; யாரையும் பேசவும் விட மாட்டார்கள். ஆனால், எங்களின் நிலைப்பாடு அதுவல்ல. நாங்கள் ஹிந்தி பேசுகிறோம்; ஹிந்தி திரைப்படங்களை பார்க்கிறோம்; இசையை கேட்கிறோம்.மேலும், மற்றவர்கள் ஹிந்தி பேசுவதை நாங்கள் ஒருபோதும் தடுத்தது கிடையாது. துவக்கப் பள்ளிகளில் ஹிந்தியை திணிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதற்காகத் தான் இந்த போராட்டம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Ganapathy
ஜூலை 08, 2025 14:15

இப்படி பல அசிங்கங்களை சகிச்சுகிட்டாதானே ஒண்ணுந்தெரியாம இங்க பொழப்பு ஓட்ட முடியும்...


vbs manian
ஜூலை 08, 2025 08:48

கழகம் முந்திரி கொட்டை பேச்சு பேசி மூக்குடைபட்டு நிற்கிறது.


தஞ்சை மாமன்னர்,
ஜூலை 07, 2025 18:44

எல்லாம் வெட்டி உதார் ஆர்ட்டிஸ்ட்.. இங்கே ஈர வெங்காய பேச்சு அங்கே துணைவி கோவில் கோவிலா போய்...கேவலம்


ராஜா
ஜூலை 07, 2025 15:43

கருத்து சுதந்திரம் என்பதை இஷ்டத்துக்கு பிரயோகிக்கிறார் பாருங்க மகாராஷ்டிரா மாதிரி தான்.


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 12:13

சிவசேனை ஊழியர்களின் குடும்பத்தினர் நிறைய பேர் தனியார் மற்றும் அரசுப்பள்ளி ஹிந்தி ஆசிரியர்களாக உள்ளனர். மஹாராஷ்டிர அரசுக்கான மத்திய அரசின் கடிதத்தொடர்புகள் முழுவதும் ஹிந்தியிலேயே இருப்பதை கூட சிவசேனை எதிர்க்கவில்லை. ரயில், தபால் நிலைய பலகைகளில் ஹிந்தி இருப்பதையும் அழிப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் ஹிந்தி மூன்றாவது விருப்ப மொழியாக இருப்பதையும் தடுக்கவில்லை. இங்குள்ள நிலைமை? ஹிந்தி திணிப்பு மட்டுமல்ல. சமஸ்கிருதத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் முட்டாத்ததனம் மகாராஷ்டிராவில் கிடையாது.


திருட்டு திராவிட அயோக்கியன்
ஜூலை 07, 2025 10:09

இப்பொழுது


theruvasagan
ஜூலை 07, 2025 08:58

சீ்ட்டு எழுதிக் கொடுக்கிறவன் ஒழுங்காத்தான் எழுதிக் கொடுத்திருக்கான்னு பக்கத்துல இருக்குறவனுக சொல்லுவானுகளான்னு பார்த்தா அதுக்கும் நாதியில்லையே.


Ganapathy
ஜூலை 08, 2025 14:16

அருமை


அப்பாவி
ஜூலை 07, 2025 07:03

மராத்தி, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி எல்லாமே மேலே கோடு கிழிச்சு எழுதும் மொழிகள். பெரிய வித்தியாசம் கிடையாது. அஞ்சாங்கிளாசுக்கு அப்புறம் திணிச்சா ஓக்கே யா. எங்களுக்கு வாணாம்பா.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 07, 2025 10:37

பாத்து கும்மிடிப்பூண்டிய தாண்டிட போறிங்க.... குண்டு சட்டியில குதுர ஓட்டுற நமக்கு அதுதான் வசதியாக இருக்கும்....!!!


Ganapathy
ஜூலை 08, 2025 14:18

நாம உண்டு நம்ம கிணறு உண்டுன்னு இருக்கப்போறோம்.


Suppan
ஜூலை 08, 2025 15:47

குஜராத்தி ,மொழிக்கு மேலே கொடு கிழிப்பது இல்லை. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி બધું જાણો கருத்து எழுத வேண்டியது.


KR india
ஜூலை 07, 2025 06:26

இண்டி கூட்டணியில் உள்ள சிவசேனாவின் முக்கிய தலைவர் திரு.ராவத் அவர்கள், தி.மு.க கட்சியின் தவறான கொள்கைகளின் ஒன்றான, " ஹிந்தி எதிர்ப்பு" செய்து வரும் தவறை நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். இது, இன்று நேற்றல்ல, தி.மு.க தோன்றிய காலம் முதல் இப்படித்தான் திருந்தாமல் உள்ளனர். ஆனால், அவர்கள் கட்சிக்காரர்கள் நடத்தும், ஆங்கில வழி பள்ளிகளில், ஹிந்தி மட்டுமல்லாது, வெளிநாட்டு மொழிகளும் கூட பயிற்றுவிப்பதாக செய்தி வந்தது. அதை கேட்டால், அரசியல் வேறு வியாபாரம் வேறு என்கின்றனர். பணக்கார வீட்டுப் பிள்ளைகள் கூடுதலாக சில மொழி படிப்பது போல், தமிழக அரசுப் பள்ளி மாணவர்களும் ஹிந்தி படித்து விட்டுப் போகட்டுமே அதற்குண்டான வாய்ப்பை, அதாவது ஹிந்தி மொழியை மூன்றாவது மொழி பாடத்திட்டமாக தமிழக அரசு தானே வழங்க வேண்டும். முன்னாள் காங்கிரஸ் முதல்வர் காமராஜர் அவர்கள் ஹிந்தி மொழியை ஆதரித்தார். அவர் காலத்தில், ஹிந்தி மொழி, தமிழக அரசுப்பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டது. அதே சமயத்தில், அரசியல்வாதிகள் நடத்தும் சில பள்ளிகளில், பள்ளி வளாகத்தில், தமிழில் பேசினால் அபராதம் என்றெல்லாம் செய்தி வந்ததே அப்படி எல்லாம் இல்லாமல், காமராஜர் ஐயா காலத்தில், தாய் தமிழ் மொழி ஒரு போதும் புறக்கணிக்கப் பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் மொழி கட்டாயம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அதே சமயத்தை, இந்தியாவில் அதிக அளவிலான மாநிலங்களில் பேசப் பட்டு வரும் ஹிந்தி மொழியை, பொது மொழியாக National Language ஏற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயம். அன்னை தமிழை காப்போம் அனைத்து மொழிகளையும் கற்போம்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 07, 2025 06:39

பணக்காரர்கள் மாத்திரம் அல்ல , வந்தேறி மதத்தினரும் இந்தி பேசுவார்கள் , இந்தி ஹீரோக்களை கொண்டாடுவார்கள் , அவர்கள் ஆட்டோவில் இந்தியை ஆங்கிலத்தில் எழுதி இருப்பார்கள் ,


Ambedkumar
ஜூலை 07, 2025 05:26

விரும்பியவர்கள் படித்துக்கொள்ளலாம் என்பது விட்டேத்தித்தனமான பதில். தனியார் பள்ளிகளில் படிக்கும் பெருவாரியான குழந்தைகள் மூன்றாவது மொழி படிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அதே போல் அரசுப்பள்ளிகளில் படிப்பவர்களுக்கும் அந்த வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தித்தரவேண்டும் விரும்பியவர்கள் படித்துக்கொள்ளலாம் என்றால் அரசாங்கம் எதற்கு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை