உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உணவு டெலிவரி ஊழியருக்கு கன்னடம் தெரிய வேண்டாமா; சமூக வலைதளத்தில் கிளம்பியது விவாதம்!

உணவு டெலிவரி ஊழியருக்கு கன்னடம் தெரிய வேண்டாமா; சமூக வலைதளத்தில் கிளம்பியது விவாதம்!

பெங்களூரு: உணவு வினியோகம் செய்ய வந்த ஸ்விக்கி ஊழியருக்கு கன்னடம் தெரியவில்லை என்று கூறி, பெண் ஒருவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா, பெங்களூருவை சேர்ந்த ரேகா என்ற பெண், 'ஸ்விக்கி ' ஆன்லைன் உணவு வினியோக நிறுவனம் மூலம் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார். பிறகு, அவர் 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் கூறியுள்ளதாவது; பெங்களூரு கர்நாடகாவில் உள்ளதா அல்லது வேறு எங்காவது உள்ளதா? ஸ்விக்கி, உங்கள் ஊழியருக்கு கன்னடம் பேசவும் தெரியவில்லை. புரியவும் செய்யவில்லை. ஆங்கிலமும் தெரியாது. நாங்கள், எங்களது மண்ணில் அவரின் மொழியான ஹிந்தியை கற்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? இதுபோன்ற விஷயங்களை திணிப்பதை நிறுத்திவிட்டு, உங்கள் ஊழியருக்கு கன்னடம் தெரிந்து இருப்பதை உறுதி செய்யுங்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.உடனடியாக இந்த பதிவு ஆன்லைனில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 2.35 லட்சம் பார்வைகளை பெற்ற அந்த பதிவிற்கு, ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

thangavel
செப் 15, 2024 10:53

குடும்ப கஷ்டம் போக்க வேலை செய்பவரி பிள்ளைப்பில் மண்ணை போடாதீர்கள்


HoneyBee
செப் 15, 2024 09:37

அவள் வீட்டில் சமைத்து சாப்பிட்டால் இந்தபிரச்சனை இல்லயே. ரஷ்யா போய் இவள் ஆங்கிலம் பேசினாலும் எவனும் இவளுக்கு வழி காட்டமாட்டான். வீணாக ஏதோ வம்புக்கு இழுத்து நாட்டின் அமைதியைகுலைக்க சோரஸ் கூட்டாளி பப்பு கூட்டம் போடும் நாடகம். சோறு தானே கேட்ட வந்ததா தின்னமாபோய் குப்புற படுத்தமான்னு இல்லாமா. அவனுக்கு இந்தி தெரியும் ஆனா தமிழ் கன்னடம் மராட்டி தெரியாதுன்னட்டு. மூடிக்கொண்டு சும்மா போம்மா


chennai sivakumar
செப் 15, 2024 09:04

அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் போல இந்த மொழி பிரச்சினை. இது இத்தனை காலம் தமிழ் நாட்டில் மட்டும் பெரிதாக இருந்தது. இப்போது கேன்சர் வியாதி போல அண்டை மாநிலங்களுக்கும் பரவி விட்டது. அடியும், முடியும் காண முடியாத சிவபெருமான் போன்றது இந்த மொழி பிரச்சினை. தமிழ் நாட்டை போல எல்லா மாநிலங்களும் இரு மொழி கொள்கையை கடை பிடிக்க வேண்டும். அப்போது ஓரளவிற்கு ஒரு நூற்றாண்டுகளுக்குப் பிறகாவது இந்த மொழி பிரச்சினை சரி ஆகி விடும் என்று எண்ணலாம்


HoneyBee
செப் 15, 2024 09:39

அப்போ வேற எந்த மாநிலத்துக்கும் நம்மவர்கள் போக வேண்டாம். வேலை வாய்ப்பு விடியலாரும் சாமானும் ஏற்படுத்தி தருவார்களா. உன் வீட்டில் யாரும் ஆந்திரா கர்நாடகா கேரளாவிலும் டெல்லி மும்பை போகாமல் வீட்டில் வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறார்களா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை